சியான் 63 : அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

Web Ads

சியான் 63 படம் குறித்து தயாரிப்பாளர் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார்.

Chiyaan 63  The producer gave the update.. The fans are happy.!!
Chiyaan 63 The producer gave the update.. The fans are happy.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து சியான் 63 படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வா இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். அதாவது சியான் 63 படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் அப்டேட் சரியான நேரத்தில் வரும் என்றும் கூறியுள்ளார். மேலும் இப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம் என்றும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Chiyaan 63  The producer gave the update.. The fans are happy.!!
Chiyaan 63 The producer gave the update.. The fans are happy.!!