Chinese President Xi Jinping to visit India | Narendra Damodardas Modi
Chinese President Xi Jinping to visit India

Chinese President Xi Jinping to visit India – மாமல்லபுரம்: பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணமாக, சென்னை முதல் மாமல்லபுரம் வரை சுமார் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து, நாளை மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

இதனால் தமிழகம் வரும் சீன அதிபருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, மாமல்லபுரம் பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜின்பிங்குடன் 200 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் தமிழகம் வருகை தருகிறது. ஜின்பிங் வருகையை முன்னிட்டு நேற்றே சீனாவில் இருந்து அதிநவீன 4 கார்கள் சென்னை வந்துவிட்டன என்பது குறிப்பிடதக்கது.

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணை!

இந்நிலையில் மாமல்லபுரத்தில் 800 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரை 22 கிராம மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜின்பிங் செல்லும் இடங்களில் திபெத்தியர்கள் தற்போது சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சென்னை முதல் மாமல்லபுரம் வரை திபெத்தியர்கள் எந்த ஒரு இடத்திலும் போராட்டம் நடத்திவிடக் கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சென்னை அண்ணாசாலை, பழைய மகாபலிபுரம் சாலையான ராஜீவ் காந்தி சாலை, ஜிஎஸ்டி சாலை, அடையாறு சர்தார் படேல் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை முதல் மாமல்லபுரம் வரை சுமார் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.