champion-review
சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் விஸ்வா, நரேன், மனோஜ், மிரளாயினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாம்பியன். ஆர். கே சுரேஷின் ஸ்டூடியோ 9 புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது. படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

வடசென்னையை சேர்ந்த மாணவனான விஸ்வா கால்பந்தாட்டத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். எப்படியாவது கால்பந்தாட்டத்தில் சாம்பியனாக வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறார்.

இவருடைய அப்பாவை கொலை செய்து விடுகின்றனர். இதனையடுத்து விஸ்வா என்ன செய்கிறார்? கால்பந்தாட்டம் ஆடி சம்பியனாகிறாரா? அல்லது தன்னுடைய அப்பாவை கொன்றவரை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறாரா? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

அறிமுக நாயகன் விஸ்வா இந்த படத்திற்காக கால்பந்தாட்டத்தை எல்லாம் கற்று கொண்டு நடித்துள்ளார். வடசென்னை இளைஞனாகவே தோற்றமளிக்கிறார்.

கோச்சராக வரும் நரேனும் விஸ்வாவின் அப்பாவாக வரும் மனோஜும் படத்திற்கு பெரிய பலமாக இருந்துள்ளனர். இருவரும் அவர்களின் கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி ரசிக்கும் படியாக அமைந்திருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

சுஜித் சராங்கின் ஒளிப்பதிவு சூப்பர். தியாகுவின் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே மாஸ் காட்டும் சுசீந்திரன் இந்த படத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்போர்ட்ஸில் ஈடுபாடுடைய வடசென்னை மாணவர்கள் பொருளாதார பிரச்சனையால் படும் பாடுகளை அழகாக படமாக்கியுள்ளார்.

ஆனால் நாயகன் விஸ்வாவிற்கு மட்டும் கால்பந்தாட்டம் ஆட பயிற்சி கொடுத்தது போல டைலாக்குகளை பேசவும் பயிற்சி கொடுத்திருக்கலாம்.

தம்ப்ஸ் அப் :

1. கதைக்களம்
2. நரேன், மனோஜ் பாரதி ராஜாவின் நடிப்பு
3. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்
2. வடசென்னை மக்களின் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் காட்டி இருக்கலாம்.

மொத்தத்தில் சாம்பியன் வடசென்னை மாணவனின் வாழ்க்கையை பேசும் படம்.

REVIEW OVERVIEW
சாம்பியன் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
champion-movie-reviewமொத்தத்தில் சாம்பியன் வடசென்னை மாணவனின் வாழ்க்கையை பேசும் படம்.