டாட்டூ போட்டா பதவி கிடைச்சிடுமா? கிண்டல்களுக்கு தாடி பாலாஜி பதில்..!
டாட்டூ போட்டா பதவி கிடைச்சிடுமா என்று பலரும் தாடி பாலாஜியை கிண்டல் செய்து வரும் நிலையில் அவர் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தப் படம் முடித்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தி இருந்தார். அடுத்த மாதம் சுற்றுப் பயணம் போக முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி தளபதி விஜயின் டாட்டூவை நெஞ்சில் போட்டுக்கொண்டு இருந்தார். சமீபத்தில் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தாடி பாலாஜிக்கு எந்த வித பொறுப்பும் வழங்கப்படவில்லை இதனால் பலரும் டாட்டூ போட்டால் பதவி கிடைத்து விடுமா என்று கிண்டல் செய்து வந்தனர்.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாலாஜி பேசியுள்ளார் அதில் அது யாரோ அனுப்பின மீம் நான் அதை ஸ்டேட்டஸ் ஆக வைத்து விட்டேன் அது இவ்வளவு பெரியதாகும் என எண்ணவில்லை இது மட்டும் இல்லாமல் டாட்டூ போட்டு விட்டால் பதவி கிடைத்து விடுமா என்று கேட்கிறார்கள் நான் பதவிக்காக எதையும் செய்யவில்லை தொண்டனாகவே இருந்தாலும் சரிதான் எனக்கு என்ன தர வேண்டும் என விஜய் சாருக்கு தெரியும் அவரிடம் இருந்து விரைவில் அழைப்பு வரும் அதிலிருந்து நான் வேற லெவலில் ஓட போகிறேன் என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram