Boney Kapoor About Nerkonda Paarvai : Thala AJith , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Boney Kapoor About Nerkonda Paarvai :

அஜித்தான் முதலில் பிங்க் ரீமேக் ஐடியாவை சொன்னார். அவர் விருப்பத்தின்படியே இப்படத்தை ரீமேக் செய்தோம்” என போனி கபூர் கூறியுள்ளார்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் ஹீரோ எப்போ வெளியாகுது தெரியுமா? உறுதியானத் தகவல்!

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது பேட்டி கொடுத்து வருகிறார்.

இதில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, “ அஜித்தான் முதலில் பிங்க் ரீமேக் ஐடியாவை சொன்னார். அவர் விருப்பத்தின்படியே இப்படத்தை ரீமேக் செய்தோம்” என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.