உண்மையா விளையாட சொன்னா பூசி மொழுகுறாங்க.. விஜய் சேதுபதியின் ஸ்பீச், வெளியான முதல் ப்ரோமோ..!
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியே பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் விஜய் சேதுபதி பேசியபோது, வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்த பிறகு ஷோ ஏதாவது இன்ட்ரஸ்டா மாறி இருக்கா என்று கேட்டால் கொஞ்சம் யோசிக்கணும், ஒவ்வொருத்தரோட கதையை கேட்கும் போதும் அவங்கள பார்க்கிற விதம் மாதிரி இருக்கு ,ஆனா உண்மையா விளையாட சொன்னா இன்னும் பூசி மொழுகிட்டு தான் இருக்காங்க வாங்க பார்க்கலாம் என்று சொல்லி உள்ளார்.
இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram