அருணுக்கு எதிராக திரும்பிய பெண் போட்டியாளர்கள்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரம் ரியா தியாகராஜன் எலிமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ராணவ் பெண் போட்டியாளர்களின் பர்மிஷன் இல்லாமல் எகிறி குதித்து விடுகிறார். இதனால் மஞ்சரி யாரையும் கேட்காமல் இப்படி செய்தால் எப்படி என்று கேட்க அவர் விஷாலை வைத்துப் பேசுகிறார்.
உடனே விஷால் உனக்கு பிரச்சனைனா நீ பேசி பதில் சொல்லு அதுக்கு எதுக்கு விஷால இழுக்கிற என்று அவரை சொல்லுகிறார்.
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மஞ்சரி அருனிடம் மாக்கிங் பண்ணாதீங்க என்று சொல்ல உடனே அருண் எப்ப பாத்தாலும் என்னையே அப்படி சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு மஞ்சரி, கேலி ,பகடி என்று சொல்லவா என்று கேட்க பகடியும் வேணா தெகடியும் வேணாம் என்று சொல்லுகிறார். உடனே பவித்ரா பெண் போட்டியாளர்கள் என அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram