கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பைரவா ,ரஜினி முருகன், மகாநதி ,சர்க்கார், அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாலும் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது டிசம்பர் 11 மற்றும் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் க்கு திருமணம் நடக்க போவதாகவும், 15 வருட நண்பனான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.