சௌந்தர்யா மற்றும் சிவகுமாரை விமர்சிக்கும் போட்டியாளர்கள்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கேற்றுக் கொள்ளாத இரண்டு போட்டியாளர்கள் யார் என்று சொல்ல வேண்டும் என்று சொல்ல போட்டியாளர்கள் ஆண்கள் அணியில் இருந்து சிவகுமாரையும் பெண்கள் அணியில் இருந்து சௌந்தர்யாவையும் தேர்வு செய்கின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சௌந்தர்யா மற்றும் சிவக்குமாரை வெளிப்படையாக விமர்சிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் முதலாவதாக அன்சிதா நீங்க ஏதாவது ஒன்னு பண்ணுறதுக்காக பண்றது எல்லாம் மொக்கையா இருக்கு கேவலமா இருக்கு என்று சொல்லுகிறார். க்யூட்னு நெனச்சு ஏதோ பண்றீங்க அதெல்லாம் பண்ணாதீங்க பாக்க சகிக்கல என்று சௌந்தர்யாவை வர்ஷினி சொல்லுகிறார்.
சிவாவ பல்வேறு கேரக்டரில் பார்க்க முடியுது ஆனால் சிவாவை சிவாவா இன்னும் பாக்கல என்று சொல்லுகிறார். தர்ஷிகா ரோஷம் என்பது உங்க டிக்ஷனரியில் எங்க இருக்குதுன்னு தெரியல எங்க வீட்டை உப்பு கூட தருவோம் என்று சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram