rashami
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது.

Biggboss rashami desai salary in biggboss – பிக்பாஸின் தொடக்கம் ஹாலிவுட்தான். அதன் பின்னர் இந்நிகழ்ச்சி பாலிவுட்டுக்குப் போனது. அதன் பின்னரே தமிழ், மலையாளம், தெலுங்கு என தற்போது அனைத்து மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

பாலிவுட்டில் சல்மான்கான் தொடர்ந்து இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நாளை 13வது சீசன் அங்கு துவங்கவுள்ளது. இது தொடர்பான புரமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. ஆனால், யார் யார் இதில் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

வெள்ளைக்காரப் பெண் பாடும் ‘மலர்ந்தும் மலராத’ பாடல் – வைரல் வீடியோ

இந்நிலையில், நடிகை ரஷாமி தேசாய் தனது காதலருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம். அவருக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருடம் இந்நிகழ்ச்சியில் அதிக சம்பளம் பெற்றவர் இவர்தான் எனக்கூறப்படுகிறது. பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளது. தற்போது ரசிகர்களின் கனவு கண்ணியாக விளங்கும் சன்னி லியோனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.