சுனிதா மற்றும் சௌந்தர்யா இடையே ஏற்பட்ட வாக்குவாதம்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

bigg boss tamil8 day 18 promo 2
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று முற்றிலும் புதிய கோணத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
18 போட்டியாளர்களில் ரவீந்தர் மற்றும் அர்ணவ் இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறப் போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் ஸ்டார் ஹோட்டல் மூன்றாவது நாளாக பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் கண்டஸ்டண்ட் என்று பிரிக்கப்பட்டு பெஸ்ட் போட்டியாளர்கள் கெஸ்ட் ஆகவும், வொர்ஸ்ட் போட்டியாளர்கள் வேலை செய்ய வேலையாட்கள் ஆகவும் மாறப்போகிறார்கள் பல சுவாரசியங்களாக இருக்கப் போகிறது.
இரண்டாவது ப்ரோமோவில் சௌந்தர்யா மேனேஜராக இருக்க சுனிதா உடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram