தமிழக ரசிகர்களை கவரும் ‘Bigg Boss Tamil Celebration Van’!

Web Ads

‘Bigg Boss Tamil Season 10’ நிகழ்ச்சியின் அனுபவத்தை ரசிகர்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Bigg Boss Tamil Celebration Van, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சென்னை, வேலூர், சேலம் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து தற்போது கோயம்புத்தூரில் Celebration Van முகாமிட்டுள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து Celebration Van-ஐ பார்வையிட்டு வருகின்றனர்.

இதில் அமைக்கப்பட்டுள்ள Confession Room ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ரசிகர்கள் தங்களது Confession-களை பகிர்ந்து கொள்வதுடன், ‘Bigg Boss Tamil Season 10’ நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள், மூத்த குடிமக்கள் வரை அனைத்து தரப்பினரும் Celebration Van-ல் பங்கேற்று மகிழ்ந்து வருகின்றனர். இதுவரை சுமார் 5,000 பேர் Bigg Boss Celebration Van அனுபவத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கும் Celebration Van பயணிக்க உள்ளது.

திருச்சி:

Web Ad 2

செப். 18 – தில்லைநகர் மெயின் ரோடு
செப். 19 – கே.கே.நகர் மெயின் ரோடு
செப். 20 – உறையூர் மெயின் ரோடு
செப். 21 – கண்டோன்மென்ட்–வில்லியம்ஸ் ரோடு

மதுரை:

செப். 22 – கே.கே.நகர் மெயின் ரோடு
செப். 23 – மாட்டுத்தாவணி–மேலூர் ரோடு சர்வீஸ் ஸ்ட்ரெட்ச்
செப். 24 – காளவாசல்–பைபாஸ் ரோடு சர்வீஸ் ஸ்ட்ரெட்ச்
செப். 25 – தல்லாகுளம்–அழகர் கோவில் ரோடு
செப். 26 – பைபாஸ் ரோடு–பொன்மேனி ஸ்ட்ரெட்ச்

திருநெல்வேலி:

செப். 27 – வண்ணாரப்பேட்டை பைபாஸ் ரோடு
செப். 28 – பாளையங்கோட்டை ஹை கிரவுண்ட் ரோடு
செப். 29 – திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய சர்வீஸ் ரோடு

Bigg Boss Tamil Celebration Van

‘Bigg Boss Tamil Season 10’ நிகழ்ச்சியை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். மேலும், JioHotstar தளத்தில் எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சியை ஸ்ட்ரீம் செய்வதுடன், Bigg Boss வீட்டின் 24×7 நேரலை ஒளிபரப்பையும் காணலாம்.