மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் 2 போட்டியாளர்கள்.. பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மீண்டும் எலிமினேஷன் ஆன போட்டியாளர்களில் இருந்து இரண்டு பேர் பிக் பாஸ் வீட்டில் வரப்போவதாகவும், அவர்களின் பங்கேற்பை வைத்து உங்களில் இரண்டு பேரை கூட ரீப்ளேஸ் செய்ய வாய்ப்பு உள்ளதாக பிக் பாஸ் கூறியுள்ளார். இதனால் போட்டியாளர்கள் மீண்டும் முதல்ல இருந்தா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். முத்துக்குமரன் இறங்கி என்ன செய்ய முடியுமோ செஞ்சுருவோம் என்று சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram