
ராதிகா கொடுத்த அதிர்ச்சி, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ராதிகா சொன்ன வார்த்தையால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க கோபி ஈஸ்வரியிடம் இந்த ட்ரிப் ஏற்பாடு பண்ணது ராதிகாதாமா என்று சொல்ல அதற்கு அவ ஸ்டேஜுக்கு வராம இருந்திருந்தாலே இத பண்ணிருக்க வேண்டும் என்று கேட்கிறார். இப்ப என்ன பண்ண சொல்ற அவளுக்கு நன்றி சொல்லணுமா என்று சொல்ல அதெல்லாம் சொல்லவே இல்லையே மா இந்த ஏற்பாடு பண்ணது ராதிகா என்று மட்டும் தானே சொன்னேன் என்று சொல்லுகிறார். உடனே கிச்சனிலிருந்து வந்த ராதிகா இந்த ட்ரிப் இனியா காம்படிஷன்ல தோத்ததுக்கு மட்டும் கிடையாது பாக்யா இன்னையோட நம்மளுக்கு கொடுத்த கெடு முடிஞ்சிடுச்சு நாளைக்கு நீங்க நான் மழை மூணு பேருந்து வீட்டில் இருந்து வெளியே போறோம் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
போறதா இருந்தா நீ மட்டும் போய் எதுக்கு என் பையனும் கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல இதுக்கு மேல கோபியை நானே பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார். ஆனால் செழியன் அவருக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல அவருடைய ஹெல்த் நல்லாதான் இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி ராமமூர்த்தியின் போட்டோவை பார்த்து இதுக்கு தான் நீங்க முன்னாடியே போய் சேர்ந்துட்டீங்களா என்னை கூட்டிட்டு போயிருக்கலாம்ல இதெல்லாம் பாக்கணும்னு எனக்கு இருக்கு நீ மட்டும் உன் பொண்ண விட்டு தனியாக இருப்பாயா? எல்லாரையும் கூட்டிட்டு போய் சாப்பாடு போட்டுட்டு இப்படி சாப்பிடுவதற்குள் தட்டி விடுற மாதிரி பண்றியே நீ மட்டும் உன் பொண்ண விட்டுட்டு தனியா இருப்பியா? என்கிட்ட இருந்து என் பையன மட்டும் எதுக்கு பிரிச்சு கூட்டிகிட்டு போற என்று சொல்லி கோபி பேச வர எதுவும் பேசாதே என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார். நாளைக்கு நாங்க போறதில வேலை எந்தவித மாற்றமோ கிடையாது என்று உறுதியாக இருக்கிறார் ராதிகா.உடனே இனியா நீங்க போகாதீங்க டாடி இங்கதான் இருக்கணும். நீங்க போகக்கூடாது என்று சொல்ல பாக்கியா நீ உள்ள போ இனியா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
பிறகு கோபி ராதிகாவிடம் நம்ப வேணா இன்னும் கொஞ்ச நாள் இந்த வீட்டிலேயே இருக்கலாமே என்று சொல்ல அது எப்படி இருக்க முடியும் இது பாக்கியலட்சுமி ஓட வீடு என்று சொல்ல நம்ப இன்னும் கொஞ்ச நாள் வேண்டுமென்றால் வாடகை கொடுக்கலாம் என்று சொல்லுகிறார் அதுக்கு பாக்கிய சம்மதித்தாலும் என்னால ஒரு நாள் கூட இந்த வீட்ல இருக்க முடியாது என்று ராதிகா உறுதியாக சொல்ல கோபி அம்மா ,செழியன், இனியா இருக்கும்போது என்னால் எப்படி விட்டுட்டு வர முடியும் என்று கேட்டு அப்ப நீங்க இங்கே இருங்க நானும் மயூவும் மட்டும் போறோம் என்று சொல்ல அதுக்கும் கோபி மறுக்கிறார்.ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைக்கணும்னா எப்படி ஏதாவது ஒரு முடிவு எடுத்து தான் ஆகணும் இது வேணும் அதுவும் வேணும்னு ஆசைப்பட்டால் எப்படி நடக்கும் என்று ராதிகா கேட்கிறார். மீண்டும் மீண்டும் கோபி இந்த வீட்டில் இருப்பது குறித்தே பேச ஒரு கட்டத்திற்கு மேல் ராதிகா நான் உங்களை ஒன்று கேட்கிறேன் என்று தப்பா நினைச்சுக்காதீங்க இப்போ எனக்கு இரண்டாவது கல்யாணம் ஆயிருக்கு இப்போ நான் என்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் வீட்ல போயிட்டு வாங்க ரெண்டு பேரும் அங்க வாழலாம்னு சொன்னா அது எவ்வளவு பெரிய அசிங்கமான விஷயம் அருவருப்பா இருக்குல்ல அப்ப எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லிவிட்டு நாளைக்கு கிளம்புவதில் எந்த மாற்றமும் கிடையாது என்று உறுதியாக சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் இனியா சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யா வருகிறார் இப்ப என்னன்னு சொன்னதுக்கு என்ன அடிக்க போறியா திட்ட போறியா என்று சொல்லிவிட்டு டாடி இருந்த வரைக்கும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா என்று கேட்கிறார். இவ்வளவு நாளா உனக்காகவும் பாட்டிக்காகவும் உங்க அப்பாவோட ஹெல்த்துக்காகவோ நான் இவ்வளவு நாள் பொறுத்து கிட்ட போன எல்லாரும் என்ன அசிங்கமா பேசுவாங்க இனியா நீ உன்னோட பக்கம் இருந்து மட்டும் யோசிக்காதே உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் என்று சொல்லுகிறார். உங்க அப்பா ரொம்ப நாளைக்கு முன்னாடி எடுத்த ஒரு முடிவுக்கான பலன் தான் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு இதுல நீ எந்த தப்பும் பண்ணல ஆனா இத நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும் வேற வழி இல்ல. நாளைக்கு போகும்போது நீ எந்த மாதிரி ஒரு எமோஷனலா பேசி போக கூடாதுன்னு சொல்லாத என்று சொல்லுகிறார். உடனே வேற வழியே இல்லையா என்று சொல்லி இனியா பாக்யா மீது சாய்ந்து கொண்டு கதறி அழுகிறார்.
பிறகு மயூ மற்றும் இனியா தூங்க ராதிகா பாக்யா ஈஸ்வரி கோபி என நால்வரும் தூங்காமல் யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர்.
மறுநாள் காலையில் ராதிகா கிளம்ப தயாராக கோபி என்ன சொல்லுகிறார்?ஈஸ்வரி என்ன கேட்கிறார்? அதற்கு கோபியின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
