
முத்துவின் காரை சீஸ் செய்த போலீஸ், ரோகினிக்கு விழுந்த பெரம்பு அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
ரோகினியை சாமியார் பெரம்பில் அடித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ் இருவரும் ரோகிணியை பார்வதி வீட்டுக்கு கூட்டி வந்து பேய் ஓட்டுவதற்காக ஒரு சாமியாரை வரவைக்கின்றனர். முதலில் அவர் விஜயா மீது பேய் இருப்பதாக சொல்ல எனக்கெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லுகிறார் எனக்கு தெரியும் பேய் புடிச்சிருக்கு என்று புடிக்காதவங்க மேல சொன்னா சந்தோஷப்படும் அதுக்காக தான் சொன்னேன் என்று சொல்ல விஜயா இது என்னோட மருமகள் இவ கொஞ்ச நாளா நைட்ல என்னென்னமோ பண்ணுதுன்னு சொல்ற என்று சொல்லுகிறார்.
சரி நான் பாத்துக்கிறேன் என்று சொல்லி ரோகிணியை உட்கார வைத்துவிட்டு அந்த சாமியாரும் உட்கார்ந்து விடுகிறார். விஜயாவை வந்து விளக்கேற்ற சொல்ல விஜயாவும் விளக்கை ஏற்றி வைத்த பிறகு அந்த சாமியார் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவங்க வீட்ல யாராவது இறந்தாங்களா என்று கேட்க அவங்க அப்பா இறந்து இருக்காங்க என்று சொல்லுகிறார் இந்த பொண்ணு உடம்புல இருக்கிறதா உங்க அப்பாவோட ஆத்மா தான் என்று சொல்ல ரோகிணி என்னோட அப்பா எப்பவோ இறந்துட்டாரு அப்போ இவன் கண்டிப்பா போலி சாமியார்தான் என்பதை உறுதி செய்கிறார். பிரம்பை எடுத்து ரோகிணி காலில் ஓங்கி அடிக்க வலியில் துடிக்கிறார். உடனே வலிக்குது மனோஜ் என்று சொல்ல மனோஜ் மற்றும் விஜயா இருவரும் அவதா வலிக்குதுன்னு சொல்றாளே வலிக்காம எதுவும் பண்ண முடியாதா என்று கேட்க இப்ப கத்துவது உங்க பொண்டாட்டி கிடையாது அந்த ஆத்மா என்று சொல்லிவிட்டு பிரம்பை மனோஜ் கையில் கொடுத்து காலையில் ஒரு வேலை நைட் ஒரு வேலை நான் அடிச்ச மாதிரி காலில் அடிக்க வேண்டும் என்று சொல்ல ரோகினி பதறுகிறார்.
உடனே மனோஜ் சாப்பிடுவதற்கு முன்னாடியா பின்னாடியா என்று கேட்க காலையில் சாப்பிடுவதற்கு முன் இரவு சாப்பிட்ட பின் என்று சொல்லுகிறார். மீண்டும் எப்படி சாமி அடிக்கிறது என்று கேட்க, அந்த சாமியார் ஓங்கி மீண்டும் ரோகினி காலில் அடிக்க வலி தாங்க முடியாமல் எழுந்து ஓடி விடுகிறார் பிறகு கதவை திறந்து உள்ளே போக என்ன ஆச்சு ரோகினி என்று கேட்க மனசும் போகணும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டு அழுகிறார்.
மறுபக்கம் முத்துவின் காரில் ஒரு சவாரி வர அவருடைய அப்பா இறந்து விட்டதால் இந்த ட்ரெயினுக்கு தான் போகணும் இல்லனா அவர் முகத்தை கூட என்னால் பார்க்க முடியாது என்று சொல்ல முத்து கண்டிப்பா நீங்க அந்த ட்ரெயின்ல தான் போவீங்க என்று சொல்லி வேகமாக ஓட்டிக்கொண்டு வர வழி மறித்து இருப்பதை பார்த்து நோ என்ட்ரியில் வர முத்துவை போலீஸ் துரத்திக் கொண்டே வருகிறது. நிற்காமல் வந்த முத்து ஸ்டேஷன்ல வரை இறக்கி விட்டு மீண்டும் வந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தின் மேல் போலீஸ் வழிமறித்து எவ்வளவு நேரம் கத்திக்கிட்டு இருக்கோம் இவ்வளவு திமிரு தான் No Entry ல வருவ என்று சொல்ல அவங்க அப்பா இறந்துட்டாரு அவருக்கு அந்த ட்ரெயின்ல அவங்க போகணும் என்ற காரணத்தைக் சொல்ல, நீ என்ன சமூக சேவை செய்ரியா என்று கார் சாவியை எடுத்து விடுகின்றனர்.
முத்து எவ்வளவு சொல்லியும் கேட்காத அந்த போலீஸ் காரை சிஸ் செய்கின்றனர் ஒரு கட்டத்திற்கு மேல் பழி வாங்குறீங்களா சார் என்று முத்து கேட்க நீயெல்லாம் ஒரு ஆளு உன்ன பழி வாங்கணுமா நோ Entry ல வந்துட்டு இவ்வளவு பேசுற என்று சொல்ல, வேணும்னா நான் பைன் கட்டிடறேன் என்று சொல்ல இந்த காரை எப்படி வாங்கிறனு நான் பாக்குறேன் என்று சொல்லிவிட்டு காரை எடுத்து சென்று விடுகிறார்.
மறுபக்கம் ஸ்ருதி ரூமில் இருக்க ரவி வருகிறார். ரவியிடம் நம்மளோட கல்யாண நாள் இப்ப போச்சுல இருந்து சொல்ல, அந்த நேரத்துல வீட்ல பிரச்சனைகள் இருந்தது என்று சொல்லுகிறார் அதனால நம்மால செலப்ரேட் பண்ண முடியல இப்போ பண்ணலாமா என்று கேட்க சரி பண்ணலாம் உனக்கு எப்படி பண்ணனும்னு சொல்லு என்று ரவி சொல்லுகிறார். அதற்கே ஸ்ருதி அவரது ஆசைகளை சொல்லுகிறார் போட்டோ சூட் எடுக்கணும் கேக் வெட்டணும் தமிழ்நாடு கேரளா ஃபுட் சாப்பிடணும் என்றெல்லாம் சொல்ல என்ன லிஸ்ட் பெருசா போய்க்கிட்டே இருக்கு என்று சொல்ல இது என்னோட விருப்பம் மட்டும் உன்னோட விருப்பம் என்னவென்று சொல்ல என்னோட விருப்பமோ இருக்கு என்று சொல்லி உன் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் என்று சொல்லுகிறார். உடனே ஸ்ருதி இப்பதான் ஒரு நல்ல புருஷனா இருக்குற என்று சொல்லி கொஞ்சுகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு போனில் முத்து கோபமாக பேசிக் கொண்டு வர பிளான் பண்ணி தான் அந்த போலீஸ் பண்ணியிருக்காரு ஏற்கனவே உன்னை ஏதாவது ஒரு கேஸ்ல புடிச்சு உள்ள போடுங்க சொன்னாரு அதை தான் இப்ப பண்ணிருக்காரு என்று சொல்லுகிறார்.
உடனே மீனா நீங்க பண்ணது தப்பு தானே என்று சொல்ல, முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
