
சூர்யா கேட்ட கேள்வி,நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சிmமுத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி லேடிஸ் கிளப்பில் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, மாதவி சுரேகா வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அவர்களுக்கு அசோகன் மாதுளம்பழம் உரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். சுரேகா மாதவியிடம் இன்னைக்கு ஈவினிங் ஒரு மேரேஜ் பங்க்ஷன் போகணும் உன்கிட்ட ஏதாவது நகை இருந்தா கொடுக்கா நான் போட்டுட்டு வந்து தரேன் என்று சொல்ல எல்லாமே திருட்டு போயிடுச்சு இல்ல என்கிட்ட இல்ல என்று சொல்லுகிறார். பேசாம நம்ம அம்மா கிட்ட போய் கேட்டு விடலாம் இப்போ அம்மா நல்ல மூடுல இருக்காங்க என்று சொல்ல சரி கேட்டுப் பார்ப்போம் என்று சொல்லுகிறார். இத கொடுத்து நந்தினி கிட்ட ஜூஸ் போட சொல்லு என்று சொல்ல எனக்கு ஜூஸ் வேணா காரமா தான் வேணும்னு சொல்ல அப்போ பிரிட்ஜில் சிக்கன் பப்ஸ் இருக்கு அதை மைக்ரோவேவ் ஓவன்ல வச்சு சூடு பண்ணிடு என்று சொல்ல சுரேகா சரி என வருகிறார்.
லேடிஸ் கிளப்பில் இருந்து வந்தவர்கள் டீ குடித்துக் கொண்டிருக்க,நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க சுரேகா இதை ஜூஸ் போட்டுட்டு ஃப்ரிட்ஜில் இருக்கிற சிக்கன் பப்ஸ் மைக்ரோவேவ் ஓவன்ல வச்சு சூடு பண்ணி வெளியே எடுத்துட்டு வா என்று சொல்ல எப்படி யூஸ் பண்றது என்று தெரியாமல் நந்தினி முழிகிறார். உடனே புஷ்பா அங்கிருந்து இந்த வேலை என்னிடம் சொல்லாதே என்று சொல்லி கிளம்பி விட, பேசாம கல்யாணம் அண்ணா கிட்ட எப்படி பண்றதுன்னு கேட்டுடலாம் என்று சொல்லி நந்தினி போன் போட்டு, மைக்ரோல சூடு பண்ண சொல்றாங்க எப்படி பண்றது கொஞ்சம் சொல்லுங்க என்று சொல்ல, கல்யாணம் எப்படி சூடு பண்ணுவது என்று சொல்லிக் கொடுக்க சரி நான் பண்றேன் என்று சொல்லி பிரிட்ஜில் இருக்கும் சிக்கன் பப்ஸ் எடுத்து அவனில் வைத்து மூடிவிட்டு சென்று விடுகிறார். நந்தினி ஜூஸ் போட்டுக் கொண்டிருக்க ஓவனில் தீப்பிடித்து வெடித்து சிதறுகிறது. அனைவரும் பதறிப் போய் ஓடி வர, கிச்சனே புகை மண்டலமாக மாறுகிறது.
உடனே மாதவி என்னாச்சு என்று கேட்க அந்த பப்ஸ் உள்ள வச்சு இப்படி ஆகிடுச்சு என்று சொல்ல அந்த அலுமினியம் கவரோடு வெச்சியா என்று கேட்க, எனக்கு தெரியாதுமா நான் பிரிட்ஜில் இருந்து எடுத்து அப்படியேதான் வச்சுட்டேன் என்று சொல்ல, சுந்தரவல்லி இன்னும் நீ என்னலா இருந்தா பண்ண போற இவளை யாரு இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னது, அத வாங்கி ரெண்டு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள கெடுத்து விட்டுட்டா. உன்னால தினம் தினம் பிரச்சனை தான் என்று சொல்ல கிளப்பில் இருந்து வந்தவர்கள் வேலைக்காரிக்கு எந்த இடத்தை கொடுக்கணும் அங்க தான் கொடுக்கணும் கொஞ்சம் இடம் கொடுத்தால் மேலே ஏறி உக்காந்துருவாங்க என்று சொல்லுகிறார். அவர்கள் மாறி மாறி நந்தினி திட்டிக் கொண்டிருக்க ஒருவர் சூர்யா நந்தினி உடன் இருக்கும் போட்டோவை பார்த்துவிட்டு கண் காமிக்கிறார். உடனே சுந்தரவல்லி இடம் நாங்க வேலைக்காரி நினைச்சு பேசிட்டோம் மன்னிச்சிடுங்க என்று சொல்ல சாரி எல்லாம் கேட்க வேண்டாம். அவ இந்த வீட்டோட வேலைக்காரி தான் என்று சொல்ல சரி நான் கிளம்பறோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். உடனே மாதவி தெரியலன்னா விலகிட வேண்டியதுதானே எதுக்கு இப்படி பண்ற என்று பொறுமையாக பேச சுரேகா கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து அனைவரும் கிளம்புகின்றனர்.
சூர்யாவை ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்து உங்ககிட்ட ஒரு ஹெல்ப் வேணும் என்று விஜி சொல்லுகிறார். நண்பனும் விஜியும் நான் சின்னதா கொஞ்ச பேருக்கு சமைச்சு கொடுக்கிறது உங்களுக்கு தெரியும் தானே என்று சொல்ல ஆமாம் என்று சொல்லுகிறார் ஆனால் அது எப்பயாவது ஒருவாட்டி தான் வருது நீங்க உங்க பிரண்டு இந்திரகுமார் கம்பெனில கேன்டீன் ஆர்டர் இருக்கு 300 பேருக்கு வெரைட்டி ரைஸ் செய்ய சொல்லி இருக்காங்க அந்த ஆர்டர் வாங்கி கொடுத்தீங்கன்னா கொஞ்சம் யூஸ் ஃபுல்லா இருக்கும் என்று சொல்லுகிறார். அவ்வளவுதானா வேணும்னா நீ நம்ம கம்பெனில கூட கேன்டீன் ஆர்டர் எடுத்துக்கோ என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம்னா இவரும் ஏற்கனவே இங்க வேலை செய்றாரு நீங்க இந்த ஆர்டர் மட்டும் வாங்கி கொடுங்க என்று சொல்ல உடனே பேசுகிறேன் என்று சூர்யா சொல்லிவிடுகிறார் உடனே இருவரும் தேங்க்ஸ் சொல்ல இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் எதுக்கு தான் இப்படி தயங்கிட்டு இருந்தீங்களா என்று கேட்கிறார். உடனே சூர்யா ஜூஸிற்கு காசு கொடுக்க பர்சை எடுக்க அதில் காசுடன் சேர்ந்து ஒரு பேப்பர் இருக்கிறது என்ன மச்சான் மளிகை சாமான் லிஸ்டா என்று கேட்கிறார். அதில் நந்தினியின் ஆதார் கார்டு ஜெராக்ஸ் பார்த்து நந்தினி இதுல அழகா இருக்காங்கல்ல என்று சொல்ல விஜி வாங்கி அதில் இருக்கும் டேட் ஆப் பர்த் பார்த்து இன்னைக்கு நந்தினியோட பிறந்தநாள் அண்ணா என்று கேட்க அப்படியா என்று வாங்கிப் பார்க்கிறார்.
எனக்கு தெரியாது என்று சொல்ல விஜி இந்த நாளை எப்படி கொண்டாடி இருக்கணும் நீங்க, இப்பவே போய் நந்தினிக்கு ஒரு நல்ல கிப்ட்டா வாங்கி கொடுத்து கொண்டாடுங்க என்று சொல்ல சூர்யாவின் நண்பனும் இப்பவே போகலாம் வா என்று அங்கிருந்து கிளம்புகின்றனர்.நந்தினி மைக்ரோவேவ் ஓவன் துடைத்துக் கொண்டிருக்க புஷ்பா, வன்மத்துல கொட்டி தீர்த்துட்டியா என்று வெறுப்பேத்திக் கொண்டிருக்க கல்யாணம் என்னாச்சு என்று பதற்றத்துடன் கேட்கிறார். உடனே புஷ்பா விட்டிருந்தா உன் தங்கச்சி இந்த வீட்டையே கொளுத்திருப்பா என்று சொல்ல என்னசும்மா என்று கேட்க நான்தான் உங்ககிட்ட எப்படி சூடு பண்ணனும்னு கேட்டா இல்லனா என்று சொல்ல நானும் உனக்கு தெளிவாக சொன்னேன் என்று சொல்லுகிறார்.
அதுல ஏதாவது பிரச்சனையா என்று கேட்க ஓவனை காட்டுகிறார். வெடிச்ச சத்தத்துல எல்லாரும் வந்துட்டாங்க அம்மா என ரொம்ப திட்டிட்டாங்க என்று சொல்ல, இது அவ்வளவு சீக்கிரம் வெடிக்காதும்மா. நீ என்ன பண்ண என்று கேட்க புஷ்பா நீ சொன்ன மாதிரி செஞ்சு விறகு கட்டையில தீய வெச்சு உள்ள போட்டுட்டா என்று சொல்ல ஒழுங்கா போயிடு என்று புஷ்பாவை மிரட்டுகிறார். நான் சொன்னதை நீ எப்படி செஞ்ச என்று கேட்க அது மேல ஒரு இருந்த அவரோட வெச்சிட்டேன் என்று சொல்ல அந்த அலுமினிய கவர் ஓட உள்ள வைக்க கூடாதுமா ஒன்னும் இல்லன்னா வெடிச்சிடும் என்று சொல்ல நான் தானா தெரியாம தப்பு பண்ணிட்டேன் என்று சொல்ல என் மேல தான் தப்பு நான் உன்கிட்ட தெளிவா சொல்லாம விட்டுட்டேன் என்று சொல்லுகிறார். இதெல்லாம் அவங்களே பண்ணியிருக்கலாம் இத கூட அவங்களால செஞ்சுக்க முடியாதா என்று சொல்ல அவங்களை எப்படி அண்ணா நம்ம குறை சொல்ல முடியும் வேலைக்காரவங்க நம்ப தான் செஞ்சு கொடுக்கணும் என்று சொல்ல இப்போ ஒன்னுக்கு ரெண்டு செலவாயிடுச்சு தனமா என்று சொல்ல, எனக்கு எப்பவுமே எந்த ஊரு இந்த சாப்பாடு இங்க இருக்கிற விஷயம் எதுவுமே எனக்கு செட் ஆகல என்று சொல்லி கண்கலங்க இந்த டப்பா போனதுக்காக எல்லாம் வருத்தப்படாதம்மா உனக்கு எதுவும் ஆகல என்று சொல்லி எனக்கு அது போதும் என்று பேசுகிறார். என்னால எதையும் சரியா செய்ய முடியும்னு தோணல என்று சொல்ல, நீ எதுக்கும் கவலைப்படாத உனக்கு நான் இருக்கேன் நான் பாத்துக்குறேன் என்று கல்யாணம் ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவின் சூர்யா நந்தினி இடம் உனக்கு ரொம்ப பிடிச்சது எதுவோ அதை சொல்லு என்று சொல்ல, புடிச்சது மட்டும் சொல்லணுமா இல்ல பிடிக்காததையும் சொல்லனுமா என்று நந்தினி கேட்கிறார்.
பக்ஷனுக்கு வந்தவர்களை நந்தினி கவனித்துக் கொண்டிருக்க அங்கு இருப்பவர் இது யார் தெரியுமா சுந்தரவல்லி மேடத்தோட மருமக என்று சொல்ல ,அவங்க இந்த வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல சுந்தரவல்லி முகம் மாறுகிறது. சூர்யா ஃபங்ஷனில் கலந்து கொண்டு மேடையில் நின்று என்னைக்கி முக்கியமான ஒருத்தவங்களோட பிறந்தநாள் அவங்கள அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி நந்தினியை கூப்பிடுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
