Web Ads

பிறந்தநாள் கொண்டாட முடிவெடுத்த பாக்யா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பிறந்தநாள் கொண்டாட பாக்யா முடிவு எடுத்திருக்க, ஈஸ்வரி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 24-02-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 24-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட்டில் பாக்கியா வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி நீ வர சொன்ன பேங்க் காரங்க வந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க அக்கா சீக்கிரம் வா என்று அழைத்து செல்ல அச்சோ மறந்து போயிட்டேன் என்று சொல்லி வேகமாக வருகிறார். பிறகு அக்கவுண்ட் ஓபன் பண்ண விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க அப்போது அவர்கள் உங்களுடைய டேட் ஆப் பர்த் என்ன என்று கேட்கின்றனர். அதற்கு பாக்யா பிப்ரவரி 25 என்று சொல்ல உடனே செல்வி நால கழிச்சி உன் பிறந்தநாள் அக்கா என்று கேட்கிறார் உடனே பாக்யாவும் ஆச்சரியப்பட்டு ஆமாம் செல்வி என்று சொல்லுகிறார் எனக்கே ஞாபகம் இல்லை என்று பேசிவிட்டு பிறகு பேங்க் காரர்கள் சென்று விடுகின்றனர்.

உடனே செல்வி உன் பிறந்தநாளை எப்படிக்கா கொண்டாட போற என்று கேட்க இதுவரை நான் கொண்டாடினதே இல்லை என்று சொல்லுகிறார் ஆனால் நான் அப்படி இல்லை என் பிறந்தநாள் கொண்டாடுவ காலைல கோயிலுக்கு போவ மதியம் பிரியாணி சாப்பிடுவேன் அப்புறம் படத்துக்கு போவ ஜாலியா இருக்கும் என்று சொல்ல பாக்யா யோசிக்கிறார். பிறகு வீட்டில் உட்கார்ந்து கிச்சனில் நோட்டில் எதை எழுதிக் கொண்டிருக்கிறார் செல்வி பார்க்கும்போது மறைத்து வைத்து எழுதுகிறார். அந்த நேரம் பார்த்து இனியா வர என்னமா பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க ரெண்டு நிமிஷம் அமைதியா இருங்க என்று சொல்லுகிறார். உடனே நோட்டில் இருந்து கையை எடுத்து விட அதில் அனைவரின் பெயர் இருப்பதை பார்த்து எதுக்கு எல்லாரோட பெரிய எழுதி வச்சிருக்க என்று கேட்கிறார்.

உடனே இனியாவிடம் இரண்டு விரலை காட்டி இதில் ஏதாவது ஒன்று தொடு என்று சொல்ல இனிய புது ரெஸ்டாரன்ட் என்று ஆப்ஷனை தொடுகிறார். உடனே பாக்யா சந்தோஷப்பட்டு நான் சூஸ் பண்ணதையே சுஸ் பண்ணிட்ட என்று சொல்ல, என்ன விஷயம் என்று இனியா கேட்கிறார். உடனே பாக்யா என்னோட பிறந்த நாளை நான் புது ரெஸ்டாரண்ட்ல இந்த லிஸ்ட்ல இருக்குற எல்லாரையும் கூப்பிட்டு கொண்டாட போறேன் என்று சந்தோஷப்படுகிறார். உடனே இனியா முகம் மாறி உனக்கு என்னைக்குமா பிறந்தநாள் என்று கேட்க நாளை கழிச்சு என்று சொல்ல இனியா பாக்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார் எனக்கே என்னோட பிறந்தநாள் தெரியாது விடு இனியா என்று சொல்லிவிட்டு வேறு என்னென்ன எல்லாம் பண்ணலாம் என்று பாக்கியா யோசிக்கிறார். உடனே செல்வி போஸ்டர் ஒட்டி பேனர் வைக்கலாம் என்று சொல்ல அதெல்லாம் ஓவரா இருக்கும் செல்வி வேண்டாம் என்று சொல்லிவிட்டு புது ரெஸ்டாரண்டில் நடக்கும் என்னுடைய பிறந்தநாள் இருவரும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லி சந்தோஷப்பட்டு நான் எந்த டிரஸ் போடுவது என்று பாக்யா கேட்க செல்வி சுடிதார் போட்டுக்கோ என்று சொல்ல இனியா பிராக் போட்டுக்கோ என்று சொல்லுகிறார். இல்ல நான் நல்ல பட்டு புடவை எடுத்துப்பேன் என்று சொல்லுகிறார். உடனே இனியா எனக்கும் டிரஸ் வேணும் என்று கேட்க உனக்கு எதுக்குடி என்று கேட்டுவிட்டு சரி எடுத்து தரேன் என்று சொல்லுகிறார். பாக்யா சென்று விட இனியா செல்வியிடம் அம்மாவுக்கு ஏதாவது ஒரு பெரிய கிப்ட் பண்ணனும் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் உட்கார்ந்திருக்க ஈஸ்வரி போனில் 48 நாள் விரதம் இருந்து பரிகாரம் செய்தால் நினைத்தது நடக்கும் என வருவதை பார்த்துவிட்டு கோபியிடம் செல்கிறார் அவரோட பொண்ணு மருமகன் பிரச்சனைல இருந்தாலும் 48 நாள் விரதம் இருந்து அந்த கோயிலுக்கு போனாரா சரியாயிடுச்சா என்று கோபியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த கோயில்ல போய் பரிகாரம் பண்ணா நீயும் பாக்கியம் ஒன்றாக சேர்ந்து வாழ்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்ல உங்களுக்கு வயசான காலத்துல இதெல்லாம் வேண்டாமா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உடனே அந்த நேரம் பார்த்து இனியா வந்து உட்கார என்ன பிசியா பேசிகிட்டு இருக்கீங்களா என்று கேட்கிறார்.

நாங்க பிசியா இல்ல நீ தான் பிஸியா இருக்க என்று கோபி சொல்லுகிறார் அதுவும் போன்ல தான் பிஸியா இருக்க என்று சொல்ல படிக்கிற பசங்க என்றால் அப்படித்தான் இருக்கும் டாடி என்று சொல்லுகிறார்.

அம்மாவுக்கு நான் ஒரு கிஃப்ட் வாங்கணும் நீங்க தான் ஐடியா தரணும் என்று சொல்ல எதுக்கு என்று கேட்கிறார் நீங்களும் மறந்துட்டீங்களா பாட்டி அம்மாவோட பிறந்தநாள் நாளைக்கு வருது என்று சொல்ல கோபியும் சந்தோஷப்படுகிறார் உடனே ரெஸ்டாரண்டில் கொண்டாட போகும் விஷயத்தை சொல்ல இப்ப எதுக்கு பிறந்தநாள் கொண்டாடணும் அவ என்ன சின்ன புள்ளையா என்று ஈஸ்வரி கேட்கிறார். ஆனால் கோபி வருஷத்துல ஒரு நாள் பிறந்தநாள் வருதமா கொண்டாடுனா சந்தோஷம் தானே என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பாக்யா வருகிறார் உடனே ஈஸ்வரி நூறு ஆயிசு பாக்கியா இப்பதான் உன்ன பத்தி பேசிக்கிட்டு இருந்தேன் என்று சொல்லிவிட்டு ரெஸ்டாரண்டுக்கு போயிட்டு வரியா என்று கேட்க இல்லத்தை எனக்கு புடவை எடுக்க போயிருந்தேன் பிறந்தநாளுக்கா என்று ஈஸ்வரி கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் நானே சொல்லலாம் என்று அதுக்குள்ள இனியா சொல்லிட்டால்லா என்று சொல்லிவிட்டு புது ரெஸ்டாரன்ட்ல கொண்டாடலாம்னு இருக்கேன் என்று சொல்ல எதுக்கு பாக்யா இதெல்லாம் என்று கேட்கிறார்.

உனக்கு கேக் வெட்டும் போது கூச்சமா இருக்காதா என்று சொல்ல நான் எதுக்கு கூச்சப்படணும் அது ஒன்னு தப்பான வேலை இல்லையே என்று சொல்லுகிறார் டெக்கரேஷனுக்கு கூட சொல்லியாச்சு என்று சொல்ல நான் போஸ்டர் கூட ஓட்றேன்னு சொன்னேன் ஆனா அக்கா தான் வேணும்னு சொல்லிடுச்சு என்று செல்வி சொல்ல உடனே ஈஸ்வரி இதுவேறியா என்று கேட்கிறார். இப்ப கூட நாங்க ஹோட்டல்ல போய் மெனு ரெடி பண்ண போறோம் என்று செல்வி சொல்ல அதற்கு பாக்கியா மெனு எழுதிட்டு உங்ககிட்ட காட்டுறேன் ஏதாவது மிஸ் ஆயிடுச்சுன்னா சொல்லுங்க என்று சொல்ல ஈஸ்வரி சரி என்று சொல்லுகிறார். பிறகு பாக்கியா கிளம்பி விட எதுக்கு இவளுக்கு இவ்வளோ கிரண்டா கொண்டாடணும் என்று சொல்லிக் கொண்டிருக்க அதெல்லாம் ஒன்னும் இல்லமா பிறந்தநாள் கொண்டாட வயசுல ஒரு காரணம் கிடையாது எந்த வயசுல உன்ன கொண்டாடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க உடனே கோபி இனியாவிடம் என்ன கிப்ட் என்று தானே கேட்டுக்கிட்டு இருந்தேன் என்று சொல்ல இல்லை எனக்கே ஒரு ஐடியா கிடைச்சிடுச்சு என்று சொல்ல என்ன கிப்ட் என்று கோபி கேட்க சஸ்பென்ஸ் என சொல்லுகிறார் இனியா.

மறுபக்கம் ரெஸ்டாரண்டில் பாக்யா மெனு போட்டுக் கொண்டிருக்க செல்வி காபி கொடுக்கிறார் நான் கேட்கணும்னு நெனச்ச செல்வி என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் நாம் மெனு ரெடி பண்ணிட்டேன் அதுவும் இல்லாம இந்த மெனுவுல எனக்கு புடிச்ச ஐட்டம்ஸ் மட்டும் நிறைய ஆட் பண்ணி இருக்கேன் என்று சொல்ல செல்வி எப்பவுமே மத்தவங்களுக்கு புடிச்ச மாதிரி செய்வ இப்ப மட்டும் என்னகா என்று சொல்ல எத்தனை நாளைக்கு நானும் மத்தவங்களுக்குன்னு செய்றது எனக்கு புடிச்ச மாதிரி மெனு ரெடி பண்ணி இருக்க என்று சொல்லுகிறார்.

நமக்காக ரெடி பண்ணி செய்வதும் சந்தோஷமா தான் இருக்கு என்ன யாருமே அந்த வீட்ல முன்னாடி எல்லாம் மதிச்சது கிடையாது என் பிறந்தநாளுன்னு தெரிஞ்சா நான் போய் கோவில்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்துடுவேன் யாராவது எனக்கு விஷ் பண்ணிட மாட்டாங்களான்னு தோணும் ஏங்கி இருக்க என்று சொல்லி செல்விடம் வருத்தப்படுகிறார். ஆனால் நம்மளுக்காக யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க நம்மளே செஞ்சிக்கிறதுலயும் சந்தோசம் தான் என்று சொல்லுகிறார் எல்லாரும் அந்த வீட்டில என்ன ஒரு பொருளா தான் பார்த்தாங்க ஆனா அப்புறம் தான் தெரியுது நானும் என்னை அப்படித்தான் பார்த்து இருக்கேன் என்று சொல்லுகிறார்.

பிறகு பாக்கியா செல்வியிடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு செல்வியின் பதில் என்ன? இனியா ஆகாஷை சந்தித்து என்ன பேசுகிறார்? இன்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 24-02-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 24-02-25