Web Ads

முத்து மீனாவிற்கு வந்த சந்தேகம், மனோஜ் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

முத்து மீனாவிற்கு சந்தேகம் வர மனோஜ் வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 24-02-25
SiragadikkaAasai Serial Today Episode Update 24-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மாஸ்க் மற்றும் கண்ணாடி போட்டுக்கொண்டு வீடியோ காலில் வர வித்தியா அவருக்கு வாய்ஸ் கொடுக்கிறார் பிறகு க்ரிஷ் பார்த்துவிட்டு இது நம்ம அம்மா மாதிரியே இல்லையே என்று பாட்டியிடம் கேட்கிறான் அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ அமைதியா இரு உடம்பு சரியில்ல அதனால மாஸ்க் போட்டு இருக்கா என்று சொல்லி சமாளிக்கிறார்.

பிறகு அண்ணாமலையும் பார்த்துவிட்டு சந்தேகப்பட பேசிக் கொண்டிருக்கும் போதே வித்யாவிற்கு தும்மல் மற்றும் இருமல் வருகிறது. ரோகிணி அதையும் சமாளித்து மீட்டிங்கை முடித்து விடுகிறார். மறுபக்கம் முத்துவும் ,மீனாவும் கோயிலுக்கு சென்று விட்டு ஸ்கூலில் வந்து அண்ணாமலைக்காக காத்துக் கொண்டிருக்க மீட்டிங் முடிந்தவுடன் க்ரிஷ் மற்றும் பாட்டி இருவரும் நடந்து வருகின்றனர். க்ரிஷ் முத்து மற்றும் மீனாவை பார்த்து கூப்பிட்டு விட அவர்கள் சாக்லேட் கொடுத்து பொட்டு வைத்து விடுகின்றன. உடனே கிரிஷ் இப்போ வந்தது எங்கம்மா மாதிரியே இல்ல மாஸ்க் போட்டுட்டு இருந்தாங்க என்று சொல்ல முத்து மற்றும் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது.

உடனே கிருஷ் பாட்டி அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி சமாளிக்கிறார். முத்து சரி வாங்க ஹோட்டல்ல போய் சாப்பிட்டு பேசலாம் என்று கூப்பிட கிருஷ் பாட்டி வேண்டாம் என்று சொல்வதற்குள் கிரிஷ் ஓகே என்று சொல்லி விடுகிறார். அவங்க அம்மா வெளியே எல்லாம் சாப்பிட கூடாதுன்னு சொல்லி இருக்கா என்று சொல்ல கிரிஷ் அப்படியெல்லாம் ஒன்னும் சொல்லல என்று சொல்ல அங்கிருந்து சமாளித்துவிட்டு கிருஷை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் மீனாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது. எனக்கு இதுல ஏதோ ஒரு குழப்பம் இருக்கு கிரிஷ் அம்மா யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன் என்று சொல்லி சொல்ல, முத்து யார் என்று கேட்கிறார். என்ன மீனா புதுசா கண்டுபிடிச்சுட்டானு சொல்ற என்று கேட்க ஆமா கிருஷ் ஓட அம்மா அந்த ஜீவா தான். கிருஷ்வோட அப்பா உங்க அண்ணன் மனோஜ் என்று சொன்ன முத்து அதிர்ச்சி அடைகிறார். ஆனா அதுல ஒரு விஷயம் இடிக்குது என்ன என்று மீனா கேட்க அவங்க ரெண்டு பேரும் ரெண்டு மூணு வருஷம் தான் பழக்கம் ஒரு வருஷம் தான் சேர்ந்து வாழ்ந்தார்கள் என்று சொன்னார்கள் கிரிஷ்க்கு ஏழு வயசு ஆகுது அப்புறம் எப்படி என்று கேட்க, உடனே மீனா அவர் உண்மை கூட சொல்லாம இருந்திருக்கலாம் வெறும் லவ் பண்ணதுக்காகவா 27 லட்சத்தை தூக்கி கொடுத்து இருப்பார் குழந்தைக்காகவும் கொடுத்திருப்பார் அதுவும் இல்லாம கிரிஷ் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாப்பல்லாம் அவரு கிரிஷ்க்காக சப்போர்ட் பண்ணி இருக்காரு என்று சொல்ல, முத்துவை ஆமா அவனும் யாருக்கும் சப்போர்ட் பண்ண மாட்டான் ஆனால் கிருஷை டாக்டர் பாக்க வந்த போது தங்கிக்கட்டும்னு சொன்னா என்று சொல்ல ரோகிணி தான் இதுல பாவம் ஏற்கனவே குழந்தை இருக்கிற ஒருத்தரை கல்யாணம் பண்ணி இருக்காங்க என்று சொல்ல முத்துவும் ஆமாம் என்று சொல்லி இதுல இருக்கிற உண்மையை முதல்ல நம்ம கண்டுபிடிப்போம் என சொல்லுகிறார்.

பிறகு இரவு நேரத்திலும் யோசித்துக் கொண்டிருக்க ஸ்ருதி போனை பார்த்துக் கொண்டே வந்து விஜயாவின் மேல் மோதி விடுகிறார் இதனால் எப்ப பார்த்தாலும் போனதா பார்த்துகிட்டு இருப்பியா என்று கேட்டுக் கொண்டிருக்க அண்ணாமலை அந்த நேரம் பார்த்து வந்து இப்ப எல்லாமே போன் கால் மூலமாக நடக்குது உலகம் அவ்வளவு முன்னேறி போயிட்டு இருக்கு என்று சொல்லி க்ரிஷ் அம்மா போன் காலில் வந்த விஷயத்தை குடும்பத்தினருடன் சொல்ல மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் வருகின்றனர். எதுக்கு மாஸ் போட்டுட்டு வரணும் என்று முத்து கேட்க உடனே மனோஜ் வெளிநாட்டில் இருக்காங்கன்னு சொல்றாங்க ரூல்ஸ் இருக்கும் அவங்களுக்கு என்ன பிரச்சனையோ என்று சொல்லுகிறார். அதைப் பற்றி பேச்சு எடுக்கும் போதெல்லாம் மனோஜ் பதில் சொல்ல முத்து மீனாவிற்கு சந்தேகம் அதிகரிக்கிறது. விஜயா இது எதுக்கு பேசிகிட்டு இருக்கனும் என்று சொல்லிக் கொண்டிருக்க உடனே மனோஜ் இப்போ உன் பையன் கிருஷ் என்றால் வெளிநாட்டில் இருக்கும்போது நீ எப்படி பேசுவ என்ன ரூல்ஸ் போட்டு இருப்பாங்களோ அப்படித்தானே பேசுவ என்று சொல்ல ரோகினி பதறிப் போகிறார்.

இது தேவையில்லாத பேச்சை பேசிகிட்டு இருக்காங்க என்று சொல்லி மனோஜ் கிளம்ப ரோகினியும் கூட்டி செல்கிறார். பிறகு மீனா தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்க முத்து வருகிறார். என்னை யோசிச்சுகிட்டு இருக்க மீனா என்று கேட்க எனக்கு சந்தேகம் அதிகமாயிட்டே இருக்கு என்று சொன்ன என்ன விஷயம் என்று கேட்க அதுதான் உங்க அண்ணன் க்ரிஷ் ஜீவா விஷயம் என்று சொல்லுகிறார். முத்துவும் மீனாவும் என்ன பேசி கொள்கின்றன? முத்துவின் பதில் என்ன? மீனா எடுக்கப் போகும் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 24-02-25
SiragadikkaAasai Serial Today Episode Update 24-02-25