பாக்கியா சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
பாக்யா சொன்ன வார்த்தையால் ஈஸ்வரி அதிர்ச்சியாகி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா எழிலிடம் கண்டிப்பா நீ படம் பண்ணனும் , இது மத்தவங்க வாங்கி கொடுத்த வாய்ப்பா இருந்தாலும் தகுதி உனக்கு இருக்கு நீ அதுக்காக கண்டிப்பா பண்ணனும் இதுக்கு மட்டும் இல்லம்மா இதுக்கு அப்புறம் நடக்குற எந்த ஃபங்ஷனுக்கு ஒன்னும் வர வேணாம்னு சொல்லுவாங்க என்று சொல்ல ஆனால் படம் பார்ப்பதற்கு என்னை வரக்கூடாதுன்னு சொல்ல முடியாது இல்ல தியேட்டர்ல பாக்கியலட்சுமி உள்ள வரக்கூடாதுன்னு எழுதி ஒட்ட முடியாதுல்ல நான் சந்தோஷமா ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ விசில் அடிச்சுகிட்டு கத்துகிட்டு முதல் ரோல உக்காந்து பாப்பேன் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். உடனே எழிலும் படம் எடுக்க சம்மதித்து விடுகிறார். ராதிகாவின் அம்மா கோபியை பார்க்க கூப்பிட என்ன வந்து அங்க அசிங்கப்பட சொல்றியா என்னால முடியாது என்று சொல்லி மறுத்து விடுகிறார் ராதிகா.
மறுபக்கம் பாக்கியா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க ஈஸ்வரி ஒரு பக்கம் கோபமாக இருக்க இனியா, செழியன் இருவரும் அழுது கொண்டிருக்கின்றனர். பாக்யா அவர்களை சாப்பிட கூப்பிட யாரும் எதுவும் பேசாமல் இருக்க இனியா மட்டும் எனக்கு வேணாம் போ என்று சொல்லி விடுகிறார்.
பிறகு பாக்கியா கிளம்ப பார்க்க ஈஸ்வரி அவரை நிறுத்தி நான் எல்லாமே யோசிச்சுட்டேன் பாக்யா நீ கோபி மேல படுற கோவம் 100% உண்மை ஆனால் அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்க வேண்டாம் நம்ம குடும்பம் மானம் தான் போகும் என்று சொல்ல யாரு என்ன சொன்னாலும் நான் கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க மாட்டேன். நீங்க ஜெயிலுக்கு போனப்போ நான் அந்த அம்மாகிட்ட போய் வாபஸ் வாங்குங்கன்னு கேட்டேன் அப்போ அவங்க பண்ணல உங்க புள்ளையும் கைய கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு தான் நின்று இருந்தாரு. ஆனா இப்ப அவருக்குன்னா நீங்க வந்து என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லிவிட்டு எந்த காரணத்துக்காகவும் நான் வாபஸ் வாங்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிடுகிறார். பிறகு சமைச்சிட்டேன் சாப்பிடுறவங்க சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார் பாக்கியா.
செழியன் கோபியை பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். கோபி செழியன் இடம் உங்க அம்மா என்னை எங்க வந்து உட்காரு வைத்திருக்கிறார் பார்த்தியா என்னை எப்படி பிளான் பண்ணி ஜெயிலுக்கு அனுப்ப பார்க்கிறா பொய் கேஸ் போடுற என்றெல்லாம் நாடகம் ஆடுகிறார். செழியன் எதுவும் பேசாமல் இருக்க, கோபி ராதிகா ஏதாவது சொன்னாளா என்று கேட்க இந்த பொம்பளைங்க இப்படி இருக்காங்கன்னு தெரியல என்று கோபப்பட்டு பேசுகிறார். அவ்வளவுதான் நான் ஜெயிலுக்கு போக போறேன் FIR போட்டாங்க என்று புலம்ப அப்படி எல்லாம் ஆகாது பாப்பா பாத்துக்கலாம் என்று சொல்லிவிடுகிறார்.
மறுபக்கம் ஜெனி இனியா மற்றும் ஈஸ்வரிக்கு காபி கொடுக்க இருவரும் வாங்க மறுக்கின்றனர் உடனே பாக்யா வந்து பண்ணாத தப்புக்கு நான் தண்டனை அனுபவிச்சா உங்களுக்கு அது சரி தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சா அது தப்பா என்று கேள்வி கேட்க இருவரும் எதுவும் பேசாமல் இருக்கின்றனர் பிறகு பத்திரிக்கையாளர்கள் சத்தம் கேட்டு பாக்கியா வெளியே வருகிறார்
பாக்கியாவிடம் ஈஸ்வரி எதுவும் சொல்லாமல் என்று சொல்ல கேள்வி கேட்டு பத்திரிக்கையாளர்களிடம் பாக்கியா சொல்லுகிறார். அவர்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை இதுக்கும் கோபியோட இரண்டாவது மனைவிக்கும் சம்பந்தம் இருக்கா என்றெல்லாம் கேட்க ரெஸ்டாரன்ட் பத்தி மட்டும் கேளுங்க சொல்றேன் என்று சொல்லிவிட்டு பாக்யா என்னோட ரெஸ்டாரண்ட்ல நம்பி வந்து சாப்பிடறவங்களுக்கு நான் கெட்டுப் போனது சமைக்கல நான் நல்லபடியா தான் சமைச்சேன் என்பதை நிரூபிக்கணும்னு நெனச்ச அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு அவர்களை கிளம்ப சொல்லுகிறார்.
பிறகு கோபிக்கு ஜாமீன் கிடைத்ததா? கோபி என்ன சொல்லப் போகிறார்? அதற்கு செழியன் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.