ஈஸ்வரி சொன்ன வார்த்தை, ராதிகா கொடுத்த பதிலடி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
ஈஸ்வரி சொன்ன வார்த்தையால், ராதிகா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி மற்றும் பாக்யா இருவரும் பேசிக்கொண்டிருக்க ஈஸ்வரி வருகிறார். ஜெனி ஈஸ்வரி இடம் எங்கேயாவது வெளியே போறீங்களா பாட்டி என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் கோவிலுக்கு போறீங்களா அத்தை என்று கேட்க இல்ல ஹாஸ்பிடலுக்கு போறேன் இன்னைக்கு கோபியோட செக்கப் இருக்கு அதனால என்று சொல்லுகிறார்.
செழியன் எங்கே என கேட்க மேலே இருப்பதாக சொல்ல ஈஸ்வரி செழியனை கூப்பிடுகிறார். என்ன விஷயம் பாட்டி என்று கேட்க இன்னைக்கு உங்க அப்பாவ செக்கப்புக்கு கூட்டிட்டு போகணும் மறந்துட்டியா என்று சொல்ல ஆமா பாட்டி மறந்துட்டேன் இன்னைக்கு ஒரு மீட்டிங் வேற இருக்கு என்று பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து ராதிகாவும் கோபியும் மேலிருந்து கீழே இறங்குகின்றனர். பைல கொடு நான் கோபியா செக்கப்புக்கு கூட்டிட்டு போகணும் என்று சொல்ல ராதிகா நான்தான் கூட்டிட்டு போற இல்ல அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் போட்டாச்சு என்று சொல்ல அப்பாயிண்ட்மெண்ட் போட்ட வரைக்கும் சரி நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்லுகிறார். பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கொண்டே இருக்க கோபி ராதிகாவுடன் போவதாக சொல்ல அப்போ நானும் வருவேன் என்று ஈஸ்வரி சொல்லுகிறார். பிறகு மூவரும் ஆஸ்பிட்டலுக்கு கிளம்புகின்றனர்.
செழியன் பாக்யாவிடம் பாட்டி என்னமா இப்படி இருக்காங்க. அவங்க நினைச்சது பண்ணனும்னு முடிவு பண்றாங்க என்று சொல்ல இப்பதான் தெரியுதா உங்களுக்கு என்று பாக்கியா கேள்வி கேட்க எதுவும் பேசாமல் இருக்கிறார் செழியன். மறுபக்கம் ஹாஸ்பிடலில் மூவரும் காத்துக் கொண்டிருக்க ஈஸ்வரி எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கிறது என்று கூப்பிடலையே என்று சொல்ல உள்ள பாத்துக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கு அப்புறம் நீங்க பாருங்க என்று சொல்லுகிறார்.
கொஞ்ச நேரம் கழித்து உள்ளே கூப்பிட யாராவது ஒருத்தர் கூட இருந்தா போதும் என்று நர்ஸ் சொல்லுகிறார். உடனே மீண்டும் ராதிகா மற்றும் ஈஸ்வரி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஈஸ்வரி நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் கூட்டிட்டு போறேன் என்று ராதிகா கோபியின் கையைப் பிடித்து கூட்டி செல்கிறார்.
ஈஸ்வரி வெளியிலே காத்துக் கொண்டிருக்க டாக்டர் உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு டென்ஷன் மட்டும் ஆகாதீங்க அடுத்த மாசம் டேப்லெட் கட் பண்றது பத்தி பேசலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். வெளியில் வந்த ஈஸ்வரி என்னை இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க என்ன ஆச்சு என்று கேட்க ஒன்னும் பிரச்சனை இல்ல சொல்லிட்டாங்க என்று சொல்லுகிறார். டென்ஷனாக கூடாதுன்னு சொல்லி இருக்காங்க ஆனா நீங்க இந்த மாதிரி பேசினா உடம்பு முடியாம தான் போகும் என்று சொல்லிவிட்டு மூவரும் ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்புகின்றனர்.
மறுபக்கம் ராஜசேகர் சார் பாக்யாவிற்கு போன் பண்ணி ஆயுத பூஜை ஆர்டர் நல்லா இருந்ததாக சொல்லியிருந்தாங்க என்று சொல்ல ரொம்ப நன்றி சார் என்று சொல்லுகிறார் அது மட்டும் இல்லாம உங்களுக்கு இன்னொரு ஆர்டர் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கோம் நீங்க நாளை மறுநாள் காலையில வந்து என் ஆபீஸ்ல பாருங்க என்று சொல்லுகிறார்.பாக்யா சந்தோஷப்பட்டு சரி என போனை வைக்கிறார். உடனே இவர்கள் மூவரும் உள்ளே வருகின்றனர் கோபி ரெஸ்ட் எடுக்க போக பாக்யா கிளம்பப் போக ஈஸ்வரி அவரை நிறுத்தி ஹாஸ்பிடல் போயிருந்தாங்களே என்ன எதுவும் கேட்க மாட்டியா என்று சொல்ல பாக்யா அமைதியாக இருக்கிறார்.
பிறகு அவங்க நடந்த விஷயங்களை பாக்கிவிடம் சொல்ல பாக்யா நீங்க எதுக்கு போகணும் அவங்க பாத்துப்பாங்க ஆயிரம் இருந்தாலும் அவங்க கோபியோட வைஃப் அவங்க அக்கறபட மாட்டாங்களா என்று சொல்ல, என்கிட்ட போயி சொன்னபாரு என்று சொல்லிவிட்டு பாக்கியாவை போக சொல்லுகிறார். சோகமாக ஈஸ்வரி சோபாவில் படுத்துக்கொண்டு நடந்ததை எல்லாம் யோசித்துக் கொண்டிருக்க பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.
பிறகு கோபி வர என்ன சொல்லுகிறார்? ஈஸ்வரி கேள்வி என்ன? அதற்கு கோபி பதில் என்ன சொல்லுகிறார்? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.