Pushpa 2

பொங்கல் திருநாளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய படங்கள்..! நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க..!

விஜய் டிவியில் பொங்கல் திருநாளில் ஒளிபரப்பாக போகும் புதிய படங்கள் குறித்து பார்க்கலாம்.

New films to be aired on Vijay TV on Pongal festivel

New films to be aired on Vijay TV on Pongal festivel

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சீரியல்கள் என அனைத்திற்கும் பெரும்பாலான ரசிகர்கள் உண்டு. அதுவும் பண்டிகை நாட்களில் பெரும்பாலும் நிகழ்ச்சிகள் மற்றும் புதிய படங்கள் ஒளிபரப்பாகுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய படங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 14-ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

New films to be aired on Vijay TV on Pongal festivel

New films to be aired on Vijay TV on Pongal festivel

ஜனவரி 14 தேதி மாலை 6:00 மணிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் கொடுத்த அமரன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் ஜனவரி 15 தேதி காலை 11 :30 மணிக்கு சுந்தர் சி இயக்கத்தில் காமெடி மற்றும் ஹாரர் கலந்த திரைப்படமான அரண்மனை 4 ஒளிபரப்பாக உள்ளது.இந்த திரைப்படம் நகைச்சுவையையும் திகிலையும் சேர்த்து ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

ஜனவரி 15ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.பாதாள குகையில் ஒரு நண்பனை காப்பாற்ற அவரது நண்பர்களும் மலைப்பகுதியில் அதிகாரிகளும் என்ன பாடு படுகிறார்கள் என்பதை பற்றி சுவாரசியமான திரை கதையுடன் இருக்கும்.

ஜனவரி 15 மாலை 6:00 மணிக்கு இயக்குனர் சி.பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகிய மெய்யழகன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது எந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பு அழுத்தமான உணர்வை கொடுக்கின்றன.

எனவே பொங்கல் திருநாளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களை குடும்பத்துடன் சேர்ந்து கண்டுகளியுங்கள்.

New films to be aired on Vijay TV on Pongal festivel
New films to be aired on Vijay TV on Pongal festivel