பாக்யா வீட்டுக்கு வந்த சுதாகர், சந்திரிகா.. சாபம் கொடுத்த ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்கியா வீட்டிற்கு சுதாகர் சந்திரிகா வர, ஈஸ்வரி சாபம் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா குடும்பத்தினரிடம் எனக்கு என்ன பத்தி கூட கவலை இல்லை ஆனால் எனக்கு அம்மாவை பத்தி தான் கவலையா இருக்கு ஏன்னா அவங்க தான் அதிகமாக இழந்துட்டாங்க அவங்க ஆசையாக வச்சிருந்தா ரெஸ்டாரன்ட் ஏமாத்திட்டாங்க அது அவங்க கிட்ட இருந்து வாங்கணும் டாடி அது மட்டும் இல்லாம கல்யாணத்துக்கு செலவு பண்ண காசையும் வாங்கணும் என்று சொல்ல கோபியும் சரி என சொல்லுகிறார் சரி நான் வேலைக்கு கிளம்புறேன் என்று எழுந்து நிற்க உடனே சுதாகரும் சந்திரிகாவும் வருகின்றனர் என்று சொல்லிவிட்டு என்ன விஷயம் என்று கேட்கின்றனர்
சுதாகர் நாங்க இனியாக கூட்டிட்டு போக வந்திருக்கோம் என்று சொல்ல எந்த நம்பிக்கையில நாங்க அனுப்பவும்னு வந்து இருக்கீங்க என்று கேட்கின்றனர் உடனே சுதாகர் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் குள்ள பிரச்சனை வரதனை செய்யும் அதுக்குன்னு விற்ற முடியாதுல்ல எப்படியாவது கூட்டிட்டு வந்துடுவேன் என்று சொல்ல உடனே கோபி உங்க வீட்ல எங்க பொண்ணு பட்ட கஷ்டமெல்லாம் போதும் இதுக்கு மேல நாங்க அனுப்புறதா இல்ல என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரியும் கோபப்பட்டு பேச ஒருவர் ஒருவர் மாற்றி மாற்றி பேசி கொள்கின்றனர் உடனே ஈஸ்வரி உங்கள சும்மா விடமாட்டேன் என் பேத்தி வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்க இல்ல எங்க வயித்தெரிச்சலங்களை சும்மா விடாது என சாபம் கொடுத்து அனுப்புகிறார்.
மறுபக்கம் பாக்கியா ஹோட்டலுக்கு வர செல்வியும் அவரது மகனும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன. பாக்யா ஹோட்டலில் வந்து உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்க சாப்பிட்டு வந்தவர்கள் பில் கட்டும் போது ஆகாஷ் சாப்பிட்ட உணவுகளை சொல்ல பாக்கியா அதற்கு கம்மியான காசுகளை சொல்லுகிறார். உடனே ஆகாஷ் சொன்னவுடன் ஆமாம் என்று சொல்லுகிறார் அதேபோல் பண்ணிக் கொண்டிருக்க பிறகு கூட்டம் அனைவரும் சென்று பிறகு செல்வி என்னாச்சுகா என்று கேட்கிறார் எல்லாரும்எப்படி இருக்காங்க என்று கேட்க எப்படி இருப்பாங்க எல்லாரும் இனியா வாழ்க்கையே நெனச்சு தான் கஷ்டப்படுறாங்க என்று சொல்ல ஒரு ரெஸ்டாரன்ட் காக அந்த ஆளு இனியாவோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான். அந்த ஆள சும்மாவே விடக்கூடாது அக்கா என்று சொல்லுகிறார். காலையில கூட வீட்டுக்கு வந்தார் என்று சொல்ல செல்வி அவரால மட்டும் எப்படி முடியுது இது மாதிரி ஒரு துரோகத்தை பண்ணிட்டு எப்படி வந்து நிற்கிறார்கள் என்று கேட்கிறார்.
ஆகாஷ் பாக்கியாவிடம் என்ன மன்னிச்சிடுங்க ஆன்ட்டி நான் மட்டும் நீயா கூட பேசாம இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது என்று சொல்ல உன் மேல எந்த தப்பும் இல்லப்பா நீ இப்போதைக்கு எதுவும் வேணாம்னு சொன்ன உடனே ஒதுங்கிடீங்க ஆனா எங்க வீட்ல இருக்குறவங்களோட தப்புதான் என்று சொல்கிறார். மறுபக்கம் சுதாகர் நிதிஷை ஜாமீனில் எடுத்து வர நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ தெரியாது அந்த பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் இல்லனா மூணு பேரும் ஜெயில்ல உட்கார வேண்டியதுதான் என்று சொல்லுகிறார் உடனே நிதிஷ் இனியாவின் ஆபீசுக்கு வர அங்கு என்ன நடக்கிறது? நித்திஷ் என்ன சொல்லுகிறார்? இனியாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்
