முத்துவுக்கு தெரிந்த உண்மை, அருண் சொல்ல போகும் பதில் என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்துவுக்கு அருண் திருமணம் பற்றி தெரிய வர கல்யாணத்தை நிறுத்தி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் வடைக்கு சண்டை போட உடனே ரவி யாருடன் சண்டை என்று முத்து கேட்க இவன்தான் என சொல்ல உடனே மனோஜ் மாப்பிள்ளை வீட்டுக்கு பாருங்க பொண்ணு வீட்டுக்காரங்க பிரிச்சி பேச அப்படி எல்லாம் பேசாதடா வடை போட்டுக்கிட்டே இருந்தாங்க காலி ஆயிடுச்சு இப்ப வந்துருவோம் என்று சொன்னால் கொஞ்ச நேரத்தில் வடையை எடுத்து கொண்டு வந்து வைக்க மனோஜ் 2 வைக்கின்றன அண்ணனுக்கு அவ்வளவுதானடா என்று கேட்க எல்லாருக்கும் வரணும் இல்ல என்று சொல்லி விட்டு ரவி சென்று விடுகிறார். சீதா ஒரு பக்கம் தயாராகி இருக்க அருண் ஒரு பக்கம் பிரண்ட்ஸ் உடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் ஐயர் மாப்பிள்ளை கூட்டிட்டு வாங்க என்று சொல்ல அருண் அம்மா மாலை போட்டு அனுப்பி வைக்கிறார். அருணுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த வைத்த போது கையெழுத்து போட்ட பிரெண்ட் கல்யாணத்துக்கு வந்து உட்காருகிறார். அவரது மனைவியிடம் இது அருணுக்கு இரண்டாவது கல்யாணம் என்று சொல்ல என்ன சொல்றீங்க என்று கேட்க அதெல்லாம் அப்புறம் சொல்றேன்னு சொல்லிவிட்டு வெளியில் போக உடனே அவரிடம் மனைவி பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரிக்க அப்படியே மண்டபம் ஃபுல்லா பரவி விடுகிறது.
உடனே மீனாவின் பூக்கட்டும் பிரண்டுக்கு தகவல் வர அவர் மீனா விடம் வந்து அருணுக்கு இது இரண்டாவது கல்யாணம் என்று சொல்றாங்க உண்மையா என்று கேட்க பாமக என்று சொல்லுகிறார் என்ன மீனா சொல்றேன் என்று கேட்க முதல் கல்யாணமும் சீதாவோட தான் நடந்தது எங்க வீட்டுக்காரருக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாததால ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க என்று சொல்லுகிறார். என்ன மீனா இது அண்ணாதான் கோவக்காரச்சு உண்மைய சொல்லு இருக்கலாம் இல்ல என்று சொல்ல அதற்கான நேரம் வரல அக்கா என்று சொல்லுகிறார். சரி நீங்க போங்க என்று சொல்லி அனுப்ப மண்டபத்தில் இருக்கிறவங்க எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க இது அவர் காது போறதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்னு மீனா மண்டபத்துக்குள் வந்து நிற்க முத்து கூப்பிடுகிறார். மீனா பயத்தில் வந்து நிற்க கெத்தா அந்த அருண் உட்கார்ந்துகிட்டு இருக்கா அவன் என்ன ஜெயிச்சுட்டு தான் நினைச்சிருப்பேன் ஆனா எனக்கு சீதாவோட சந்தோஷம்தான் முக்கியம்.
அதுவும் இல்லாம அவன் போலீஸ்காரன் நான் சாதாரண டிரைவர் ஆனால் என்னுடைய விருப்பத்திற்காக ஒரு குடும்பத்தில் இருக்கிறவங்க காத்துக்கிட்டு இருந்தாங்க, சீதா என் முடிவுக்காக தான் காத்துகிட்டு இருந்தது அதனால அவன் ஜெயிச்சுட்டுதாவே நினைச்சுக்கட்டும் என்று சொல்லுகிறார். உடனே சந்திரா பொண்ண கூட்டிட்டு வரலாம் என மீனாவை அழைத்துச் செல்ல நான் கீழ போய் வரவர்களை பார்க்கிறேன் என முத்து செல்ல இருவரும் சீதாவை அழைத்து வருகின்றனர்.
வெளியில் முத்து பேசிக் கொண்டிருக்க இருவர் இது இரண்டாவது கல்யாணம் என பேசிக்கொண்டு போவதை கவனித்து விட்டு அவர்களிடம் விசாரிக்க அவர்கள் இரண்டாவது கல்யாணம் தான் என மண்டபம் ஃபுல்லா பேசிக்கிறாங்க என்று சொன்ன உடனே முத்து பொய் சொல்லி சீதா இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறானா இது தெரிஞ்சா சீத்தாவே செருப்பை கழட்டி அடிச்சிடுவா இந்த கல்யாணம் நடக்கும் கூடாது என்று கோபமாக மண்டபத்துக்குள் வருகிறார். கோபமாக அருணை முறைத்துக் கொண்டு வர மேளதாளத்தை நிறுத்த சொல்லுகிறார்.
உடனே அருண் சட்டையை பிடித்து இழுத்து வர மறுபக்கம் சீதா மீனா சந்திரா அனைவரும் வந்து விடுகின்றனர்.இது அருணுக்கு இரண்டாவது கல்யாணம் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அருண் என்ன சொல்லுகிறார்?அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
