மீண்டும் ரவுடிகளிடம் சிக்கிய நந்தினி, சுந்தரவல்லிக்கு வந்த சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial episode update
நேற்றைய எபிசோடில் நந்தினி ரவுடிகளிடம் சாப்பிட பிரியாணி கேட்க, சரி வாங்கிட்டு வரேன் என்று சொல்ல நாட்டுக்கோழி சிக்கன் பிரியாணி தான் வேணும் என நந்தினி சொல்லுகிறார். மீண்டும் வாங்கிட்டு வரேன்னு சொல்ல கூப்பிட்டு சீரக சம்பா அரிசி தான் வேண்டும் என சொல்ல ரௌடியும் பிரியாணி வாங்க கிளம்புகிறார். உடனே நந்தினி அடைத்து வைக்கப்பட்டிருந்த ரூமில் இருந்து தப்பித்து ஓட அவர்களை தடுத்த பெண்மணிகளை அடித்து தள்ளிவிட்டு வெளியில் ஓடி வருகிறார். நந்தினி தப்பித்து வெளியில் வந்து விட ரௌடிகள் பின்னால் துரத்தி வருகின்றனர்.சூர்யா வந்து கொண்டிருக்க ஒரு இடத்தில் கார் ரிப்பேர் ஆகி நிற்கிறது. உடனே விவேக்கிற்கு போன் போட்டு மெக்கானிக் அழைத்து வர சொல்லுகிறார். சரி வரேன் நந்தினி கெடச்சாங்களா என்று கேட்க இன்னும் இல்லை நீ வா நேர்ல பேசிக்கலாம் என்று சொல்லுகிறார். சிகரெட் இல்லாததால் ஒருவரிடம் விசாரித்து சூர்யா சிகரெட் வாங்க நடந்து வருகிறார்.
அப்போது நந்தினி தலையில் இருந்து விழுந்த ஹேர் கிளிப் சூர்யா கையில் கிடைக்கிறது. பிறகு சூர்யா யோசிக்க இது நந்தினியின் கிளிப் என தெரிய வருகிறது. உடனே நந்தினி இங்கதான் எங்கேயாவது இருக்கணும் என சூர்யா தேடி ஓடுகிறார். ஒரு பக்கம் சூர்யா,ஒரு பக்கம் நந்தினி மறுபக்கம் ரவுடிகள் என ஒவ்வொருவரும் ஒருஒரு தெருவில் ஓடுகின்றனர். விவேக் சூர்யாவிற்கு ஃபோன் போட, நந்தினி இங்கதான் இருக்கா, எனக்கு தோணுது இந்த ஹேர் கிளிப் நந்தினியோடது தான் என்று சொல்ல, ஹேர் கிளிப் நிறைய பேர் வெச்சிருப்பாங்க என்று சொல்ல இல்ல இது நந்தினி ஓடது தான் என்று சொல்லுகிறார். டைம் ஆகிட்டே இருக்கு நம்ம நந்தினியை தேட போகலாம் என கூப்பிடுகிறார்.
நந்தினி ஓடிவர எதிரில் ஒரு போலீஸ்கார பெண்மணி வர, அவரிடம் என்னை துரத்திட்டு வராங்க என்னை காப்பாத்துங்க என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்க, நந்தினி கடத்திய விஷயத்தை சொல்ல, சரி நான் கூட்டிட்டு போறேன் என்று உட்கார வைத்து அந்த போலீஸ்கார பெண்மணி மீண்டும் நந்தினி கடத்தி வைத்திருந்த இடத்திற்கே அழைத்து வந்து, இறக்கிவிட்டு இங்கு எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்க போலீஸ் என் மனைவி நந்தினியை அரைக்கிறார். நீங்கதான் அந்த அக்காவா என்று சொல்ல அவங்க எங்களுக்கெல்லாம் அக்கா என்று சொல்லி நந்தினியை உள்ளே அழைத்துச் செல்ல சொல்லுகின்றனர். உடனே போலீஸ் வட்டிக்கார பெண்மணிக்கு போன் போட்டு உன் ஆளுங்க அவளை தப்பிக்க வச்சுட்டாங்க என்று சொல்ல, உடனே பயந்து பேச பயப்படாத நான் அவளை கூட்டிட்டு வந்துட்டேன்னு இதுக்கு மேல பத்திரமா பார்த்து போ என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். பிறகு நந்தினி சேரில் உட்கார வைத்துக் வைத்து கட்டி போடுகின்றனர்.
அந்த போலீஸ் உள்ளே வந்த நந்தினி இடம் ஒழுங்கா இருந்த நான் வீட்டுக்கு போகலாம் இல்லனா உன்ன போட்டுட்டு போயிடுவாங்க என்று சொல்ல என்ன எப்ப விடுவீங்க என்று கேட்க எங்களுக்கு தேவையானதை கிடைச்ச உடனே விட்டுடுவோம் என்று சொல்ல ரவுடி பிரியாணியுடன் வருகிறார். உடனே போலீஸ் டென்ஷன் ஆகி இவ என்ன விருந்துகா வந்திருக்கா அவ பிரியாணி கேட்டப்பவே உனக்கு தெரிய வேணாம்வா என்று திட்டி விட்டு உங்களை நம்பினால் சரிப்பட்டு வராது நான் இன்னும் ரெண்டு பேரு அனுப்புறேன் பத்திரமா பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு தப்பிச்சு போகணும்னு நினைச்சா உயிரோடு இருக்க மாட்டேன் என்று மிரட்டி விட்டு சொல்கிறார். இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

moondru mudichu serial episode update