பாக்கியா எடுத்த முடிவு, கோபப்பட்ட ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

Web Ads

பாக்கியாவின் முடிவுக்கு ஈஸ்வரி கோபப்பட்டுள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 06-05-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 06-05-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா இடத்தை பார்க்க வர அங்கு இருக்கும் ஓனர் லேடிஸ் நடத்த அதனால கொடுக்க மாட்டேன் என்பது போல சொந்த விஷயங்களை பற்றி அதிகமாக கேட்ட பாக்யா புரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார் பிறகு இருவரும் ஜூஸ் குடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர் எங்க வீட்ல இருக்கிற எல்லாரும் இதுக்கு மேல வீட்ல பசங்கள பாத்துட்டு அவங்க பசங்கள பாத்துட்டு சந்தோஷமா இருக்க சொன்னாங்க ஆனா 25 வருஷமா புருஷன் காசுக்காக கையேந்திக்கிட்டு இருந்துட்டு திடீர்னு ஒரு ஏழு வருஷம் சுயமா சம்பாதிச்சு இருக்கிற சந்தோஷத்தை நான் ரொம்ப அனுபவிச்சிட்டேன் இப்ப பசங்க கிட்ட கையேந்தி நிற்க முடியாது அதனால நைட்டெல்லாம் யோசிச்சு தான் நான் இந்த முடிவெடுத்து இருக்கேன் என்று சொல்லுகிறார்.

இப்பதான் அக்கா பழைய பாக்கி அக்காவ பாக்கற மாதிரி இருக்கு நானும் அதுதான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். உங்க வீட்டில எல்லார்கிட்டயும் இந்த விஷயத்தை சொல்லிட்டியா என்று சொல்ல இல்ல இடத்தை பார்த்துட்டு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துட்டு தான் சொல்ல போறேன் என்று சொல்லுகிறார் அப்ப இன்னும் பாக்க போறோமா என்று சொல்ல மொத்தம் ஏழு இடம் பார்த்து வச்சிருக்கேன் அடுத்தடுத்த பாக்க போகலாம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகின்றனர் பிறகு இன்னொரு இடத்திற்கு வந்தால் அந்த இடம் சின்னதாகவும், சுத்தமாக இல்லாததையும் பார்த்து செல்வி இந்த இடம் வேண்டாம் போகலாம் என்று கூப்பிட இரு செல்வி ஓனர் வரட்டும் பேசலாம் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து அந்த ஹோட்டலின் ஓனர் வர இங்கே ஏற்கனவே மெஸ் வச்சு நடத்தினவங்க பெரிய ஆள் ஆகி வேற இடத்துக்கு மாறி போயிட்டாங்க என்று சொல்லுகிறார் அட்வான்ஸ் எவ்வளவு வாடகை எவ்ளோ என்று கேட்ட அட்வான்ஸ் ஒரு லட்சம் வாடகை 15000 என்று சொல்லுகிறார்.

வாடகை கம்மி பண்ண மாட்டீங்களா என்று கேட்க இதுக்கு முன்னாடி அவ்வளவு தான் கொடுத்துட்டு இருந்தாங்க நீங்க வேணா இங்க பக்கத்துல விசாரிச்சு பாருங்க என்று சொல்லுகிறார் ஒயிட் வாஷ் பண்ணி தருவீங்களா என்று கேட்க, அதெல்லாம் பண்ண மாட்டோம் வேணும்னா நீங்க தான் பண்ணிக்கணும் என்று சொல்கிறார் செல்வி போலாமா என்று சொல்ல, இல்ல செல்வி நம்மளுக்கு கைக்குகடக்கமா வாடகை எவ்வளவு கிடைச்சிருக்கு இதை விட்டுத்தான் நம்மளால வேற எங்கேயும் வாடகை கொடுத்து பண்ண முடியாது என்று சொல்லி ஓனரிடம் போக அட்வான்ஸ் கொடுத்து விடுகின்றனர்.

பிறகு செல்வி வீட்டில் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் செல்வி அவர் உன்னை பெரிய இடத்துக்கு போகணும்னு வாழ்த்துனாறு ஆனா நீ பெரிய இடத்தில் இருந்துதான் இங்க வந்திருக்கேன் அவருக்கு தெரியாது இல்ல அக்கா அப்படியெல்லாம் இருந்துட்டு இந்த இடத்துல உன்ன பார்க்கும்போது கஷ்டமா இருக்கு என்று சொல்ல நம்ப எதிர்பாக்காத அளவுக்கு வேகமாக வளர்ந்தோம் ஆனால் சதியால கீழ விழுந்துட்டோம் அதுக்கு இது ஒரு சரியான வழியா இருக்கணும்னு நினைக்கிறேன். நம்ம பள்ளத்துல விழுந்துட்டோம் செல்வி இது புடிச்சு தான் ஏந்துக்கணும்னு நம்புறேன் என்று சொல்லுகிறார். நீ எனக்கு ஒரு பெரிய பலம் நீ எனக்கு ஆதரவா இருப்பியா என்று கேட்க நான் எதுக்கு என் அக்கா என்று சொல்லுகிறார்.

பாக்கியா வீட்டுக்கு வந்து வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு ஹோட்டல் பார்த்து இருக்கும் விஷயத்தை சொல்ல ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? செழியன், எழில் என்ன சொல்ல போகிறார்கள்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 06-05-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 06-05-25