ஓவராக பேசிய கோபி, சபதம் எடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

கோபி ஓவராக பேச பாக்கியா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்க இனியா நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா அம்மா என்று கேட்க வேணா இனியா நானே பார்த்துக்கொள்கிறேன் நீ படு என்று சொல்ல இனியா படுத்துக் கொள்கிறார். இனியா பாக்கியாவிடம் இது எல்லாமே சரியாயிடும் இல்லம்மா என்று சொல்ல கண்டிப்பா சரியாயிடும் நான் பாத்துக்குறேன் நீ தூங்கு என்று சொல்ல இனியா தூங்காமல் இருக்கிறார். இன்னும் நீ வேலை முடிக்கலையாமா என்று கேட்க நீ இன்னும் தூங்கலையா இனியா என்று சொல்லிவிட்டு கணக்குகள் எடுத்து வைத்துவிட்டு இனியாவுடன் படுத்து கொள்கிறார். பிறகு கீழே இறங்கி வர ஈஸ்வரி தூங்காமல் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

பாக்கியா ஈஸ்வரியிடம் என்ன அத்தை தூங்காம இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்க, என்னால உனக்கு இவ்ளோ பெரிய பிரச்சினை வந்துருச்சு பாக்யா நான் வந்திருக்க கூடாது நான் வந்து அடுப்பு பத்த வச்சி இருக்க கூடாது. நான் எல்லாரும் சொல்ற மாதிரி வீட்டுக்குள்ளே ஏதாவது இருக்கணும் என்றெல்லாம் பேச இந்த மசாலா கம்பெனி ஆரம்பிச்சதுல இருந்து நீங்க தான் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ஆனா இது அப்படி ஆகலையே என்று சொல்ல எல்லாமே உங்க மாமா இருக்கிற வரைக்கும் தான் எல்லாத்தையும் அவர் போனதுக்கப்புறம் என்கிட்டே இருந்து எடுத்துட்டு போயிட்டாரு. என்று ஈஸ்வரி சொல்ல பாக்யா இருக்கு உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது கண்டிப்பா நான் அதை நிரூபிப்பேன் யார் இதை பண்ணாங்கன்னு நான் கண்டுபிடிக்கிற அத்தை என்று சொல்லி அவரை ரூமுக்குள் அழைத்து சென்று படுக்க வைக்கிறார்.

BaakiyaLakshmi Serial Episode Update
BaakiyaLakshmi Serial Episode Update

மறுநாள் காலையில் பாக்யா தூங்கிக் கொண்டு இருக்க செல்வி பால் பாக்கெட் உடன் கதவை தட்டுகிறார் இரவு தூக்கத்தில் இருந்து எழுந்து கதவை திறக்க என்ன காலை எல்லாம் தூங்கவே இல்லையா என்று கேட்கிறார். கணக்கு பார்த்துகிட்டு இருந்தேன் நாலு மணி வரைக்கும் அதுக்கப்புறம் எப்படி தூங்கணும்னு தெரியல அசந்து தூங்கிட்டா என்று சொல்ல சரி நான் போய் காபி போடறேன் என்று பாக்யா சொல்கிறார் அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ போயிட்டு சுடுதண்ணி போட்டு குளிச்சிட்டு வா என்று அனுப்பி வைக்கிறார். பிறகு பாக்யாவும் செல்வியும் வாக்கிங் வர செல்வி இந்த நேரத்துல வாக்கிங் ரொம்ப முக்கியமாக மேல கூட நடந்து இருக்கலாம் என்று சொல்ல வீட்டுக்குள்ள இருந்தா மூச்சு முட்டுற மாதிரி இருக்கு செல்வி என்று பேசிக்கொண்டே வர அதற்கு செல்வி ஏற்கனவே ஓவரா பேசுவாங்க இப்ப இந்த விஷயம் தெரிஞ்ச வராங்க போறவங்க எல்லாம் கேள்வி கேப்பாங்க என்று சொல்ல அதற்கேற்றார் போல் ஒவ்வொருவராக வந்து கேள்வி கேட்க அவர்களுக்கு செல்வி பதிலடி கொடுத்து அனுப்பி வைக்கிறார்.

பிறகு கோபி பார்க்க பாக்யாவை பார்த்தவுடன் தலையில் துண்டு போட்டுக்கொண்டு ஓவராக கடுப்பேத்தும் படி பேசுகிறார். ரெஸ்டாரன்ட் மூடினதை கேட்டு மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு பாக்கியா என்றெல்லாம் நடிக்க உங்களுக்கு கஷ்டமாயிடுச்சு என்று பாக்கியா கோபமாக பேசுகிறார். இது மட்டும் இல்லாமல் பணக்கார ஆவணும்னு கனவு கண்டால் மட்டும் போதாது அதை நிஜத்துல நடக்க வைக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா? செல்வியிடம் உங்க அக்காவுக்கு நீ அட்வைஸ் கொடுக்க கூடாதா என்று கேட்க என் அக்காவை 10 பேருக்கு அட்வைஸ் கொடுப்பாங்க நான் என்ன கொடுக்கிறது என்று சொன்ன நீ ஒரு முட்டாள் இவரு பெரிய முட்டாள் ரெண்டு முட்டாளும் சேர்ந்தா எப்படி இருக்கும் என்று சொல்ல பாக்யா வார்த்தையை அளந்து பேசுங்க என்று மிரட்டுகிறார். ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி பெரிய பிசினஸ் பண்ணிடலாம்னு பார்த்தேன் இப்போ திருப்பியும் மசாலா விக்க ஆரம்பிக்க போறியா என்றெல்லாம் பேசுகிறார். நீ ஒண்ணுமே இல்ல ஜீரோ அப்படிங்கறத நிரூபிச்சிட்ட என்று பேச பாக்யா உச்சகட்ட கோபம் அடைகிறார்.

என்னதான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது நீ ஒரு ஊர் குருவி உன்னால பருந்தாக முடியாது என்றெல்லாம் தத்துவம் பேசுகிறார் உடனே பாக்யா இதுவரைக்கும் எனக்கு ரெஸ்டாரன்ட்ல சாம்ராஜ் அமைக்கணும்னு ஆசை இல்ல ஆனா நீங்க எதெல்லாம் என்னால முடியாதுன்னு சொன்னிங்களோ அதெல்லாம் நான் கண்டிப்பா பண்ணுவேன் நான் சாதிப்பேன் என்று பேசுகிறார். இந்த வாய் இந்த வாயால தான் இப்படி இருக்க என்று கேட்டுவிட்டு நீ ஒழுங்கா அடுப்பாங்கரைக்கு போயிடு அங்க போனியா பிரியாணி செஞ்சியா மீன் வருத்தியா குடும்பத்தை பார்த்தியான இரு தேவையில்லாம இப்படி பண்ண அடி மேல அடி வாங்கிட்டு தான் இருப்ப ஃப்ரீ அட்வைஸ் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே செல்வி என்னைக்கோ இல்லாம இன்னைக்கு கத்தல் ஓவரா இருக்கே அக்கா இதுல வேற என்ன முட்டாள்னு வேற சொல்லிட்டு போறாரு எனக்கு என்னமோ இதெல்லாம் இவர்தான் செஞ்சு இருப்பாரோன்னு சந்தேகமா இருக்கு என்று சொல்ல பாக்கியா யோசிக்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த பாக்கியா செல்வி கரண்ட் பில்ல ரெஸ்டாரண்டுக்கு கட்டளஎன்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஜெனியின் அம்மா வருகிறார். ஜெனி நம்ம சொல்லப்போவது என்ன? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update
BaakiyaLakshmi Serial Episode Update