விஜயா சொன்ன வார்த்தை, பதிலடி கொடுத்த ஸ்ருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
விஜயா சொன்ன வார்த்தையால் ஸ்ருதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அண்ணாமலைக்கு மீனா நீங்க சரியாவே சாப்பிடல இன்னும் சாப்பாடு வச்சுக்கோங்க என்று வைக்கிறார். இதனால் விஜயா ஒரு வயசுக்கப்புறம் அளவா தான் சாப்பிடணும் என்று சொல்லுகிறார். உடனே அண்ணாமலை எங்க அம்மா சின்ன வயசுல பஞ்சு மாதிரி இட்லி வேர்கடலை சட்னி வைப்பாங்க நான் ஏற்கனவே ஏழு இட்லி சாப்பிட்டு இருப்ப ஆனா உடனே வந்து எண்ணிக்கையே இல்லாம வைப்பாங்க என்று சொல்ல உடனே முத்துவும் ஆமாப்பா நான் பத்து இட்லி கூட சாப்பிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். அண்ணாமலை உங்க அம்மா கல்யாணத்துக்கு அப்புறம் ஏன் இவ்வளவு சாப்பிடுறீங்கன்னு தான் கேப்பா என்று சொல்ல மனோஜ், வயசாக சாப்பாடும் கொஞ்சம் கம்மியாக சாப்பிடணும் என்று பேசுகிறார். உடனே முத்து வைத்த கட்றது சரிதான் சிலர் வாயை தான் கற்றது இல்ல என்று சொல்ல மனோஜ் உடனே உங்கள தான் அம்மா என்று சொல்ல தெரியுது அவன் வேற யார சொல்லுவான் என்று சொல்லுகிறார்.
ஸ்ருதியும் ரவியும் வீட்டுக்கு வர விஜயா வாடா ரவி சாப்பிடுவ என்று கூப்பிடுகிறார். ஸ்ருதி வந்தவுடன் அண்ணாமலை உங்க அத்தை எல்லாமே சொன்னாம்மா புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வரத்து சகஜம் தான் அதுக்காக அம்மா வீட்டுக்கு போலாமா அங்க என்ன நினைப்பாங்க நாங்க இங்க உங்கள நல்லா பாத்துக்கலாம்னு தான் நினைப்பாங்க என்று சொல்ல, என்கிட்டயே சொல்லியிருந்தா நானே தீர்த்து வைத்திருப்பேன் என்று விஜயா சொல்ல உடனே சுருதி நீங்க என்ன ஐகோர்ட்டு ஜட்ஜா என்று கேட்கிறார். உடனே முத்து நக்கல் அடிக்கிறார். அப்படியெல்லாம் இல்ல அங்கிள் இந்த வீட்ல என்ன நடந்ததுன்னு நான் எதுவுமே சொல்லல நம்ம வீட்டை எப்படி விட்டுக் கொடுப்ப என்று சொல்லிவிட்டு அது மட்டும் இல்ல எனக்கு வைர மோதிரம் வாங்கி கொடுத்து கன்வின்ஸ் பண்ணிட்டான் நல்லா இருக்கா என்று கேட்க நல்லா இருக்குமா என்று அண்ணாமலை சொல்லுகிறார். உடனே முத்து என்னடா பண்ணி வச்சிருக்க நான் வெறும் மல்லி பூ அல்வாவை கொடுத்து சமாதானப்படுத்தினா நீ ஒரு ட்ரேட் மார்க் செட் பண்ற என்று கேட்க மீனா பயப்படாதீங்க நான் அதெல்லாம் கேட்க மாட்டேன் என்று சொல்ல அப்போ ஓகே என்று சொல்கிறார். அண்ணாமலை சாப்பிடுங்க என்று சொல்ல நாங்கள் சாப்பிட்டோம் எனக்கு கொஞ்சம் பீவரா இருக்கு நான் போய் ரெஸ்ட் எடுக்குற ரவி நீ ட்ராலி எடுத்துட்டு வா என்று ரூமுக்குள் செல்கிறார். சரி எடுத்துட்டு வரேன் என்று சொல்ல விஜய் ரவியை தனியாக ரூமுக்கு அழைத்து செல்கிறார். ரவியிடம் நான் சொன்னேன்ல நீ எதுக்கு அவளை கூப்பிட போன அவளா வரட்டும்னு தானே சொன்னேன் அவள் உன்னை எப்படி இப்ப மதிப்பா ஒரு ஒரு வாட்டி மோதிரத்துக்காகவே சண்டை போடுவா என்றெல்லாம் பேச நீங்க சொல்லும் போது நானும் யோசிச்சு ஆனா மீனா அண்ணி சண்டை போட்ட பிரச்சனை அதிகமாகும் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வான்னு சொன்னாங்க அதனால தான் போனேன் என்று சொல்ல மீனாவை விஜயா திட்ட அவங்கள எதுக்கு திட்டறீங்க அவங்க சரியா தான் நடந்துக்கிறாங்க என்று கவி சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே மீனா விடம் வந்தது விஜயா நீ எதுக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க உன்னை யாரை அப்படி சொல்ல சொன்னது என்று கேட்க நான் நல்லது தான் பண்ணேன் இப்ப நான் ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே அண்ணாமலை மற்றும் முத்து வந்து அப்படி இல்லப்பா சில பேருக்கு சாப்பிட்டாக்கா சோடா குடிப்பாங்க ஜீரணம் ஆகுறதுக்கு ஆனா இவங்களுக்கு மீனாவை திட்டினாதான் ஜீரணம் ஆகும் என்று சொல்லிவிட்டு மீனா விடம் எதுவும் கண்டுக்காத என கிளம்புகிறார். உடனே அண்ணாமலை நீ செய்ய வேண்டிய வேலையை மீனா செஞ்சிருக்கா, போய் உன் வேலையை பாரு என்று சொல்லி விடுகிறார்.
கிச்சனில் மீனா பால் காய்ச்சிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மாத்திரை கலக்க ரோகிணி கிச்சனுக்கு வருகிறார் மீனாவிடம் மேல துணி போட்டு இருக்கீங்களா போய் எடுத்துட்டு வாங்க என்று சொல்ல அதெல்லாம் எடுத்துட்டேன் என்று சொல்லுகிறார் இல்ல மழை வர மாதிரி இருக்கு அதுக்கு அப்புறம் நீங்க தான் திட்டு வாங்குவீங்க என்று சொல்ல அதுவும் சரிதான் நான் போய் ஒருவாட்டி பார்த்துட்டு வரேன் என்று சொல்வதற்குள் மாத்திரையை பாலில் கலந்து விடுகிறார்.
மீனா முத்துவிற்கு பாலை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அதை ரோகிணி மறைந்தது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். ரொம்ப நேரமாக மருத்துவம் எனவும் பேசிக்கொண்டிருக்க ரோகிணி கடுப்பாகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் மீனா பாலை குடிக்க சொல்ல முத்து பால் குடிக்க எடுக்கிறார்.
முத்து பாலை குடிக்கிறாரா? ரோகிணி என்ன செய்யப் போகிறார்? வீடியோவை எடுத்து விடுவாரா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்