Pushpa 2

ராதிகா கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகாவின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார்.

baakiyalakshimi serial today episode update 23-12-2024

baakiyalakshimi serial today episode update 23-12-2024

தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா டான்ஸ் கம்பெட்டிஷனில் டான்ஸ் ஆடி முடிக்கிறார் பிறகு அனைவரும் ஆடி முடிக்க இறுதியாக யார் ஃபர்ஸ்ட் செலக்ட் ஆனார்கள் என்று அறிவிப்பை சொல்கின்றனர். அதில் முதலாவதாக இனியாவின் பெயரை சொல்ல குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றன.

இனியாவை பேச சொல்லுமாறு கூப்பிட மறுபக்கம் ராதிகாவின் அம்மா உங்க அண்ணி தான் போன் பண்ணா, மாப்பிள குடும்பத்தோட டிவில தெரியுறாரா என்று சொல்ல டிவியை ஆன் பண்ணுகிறார். இனியா இறங்கி வந்து எல்லோரிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு கோபி மற்றும் பாக்யவை மேடைக்கு அழைத்துச் செல்லுகிறார் இவங்கதான் என்னோட அம்மா அப்பா என்னோட சக்சஸ்க்கு காரணம் இவங்கதான் என்று சொல்லி கட்டிப்பிடித்துக் கொள்ள இதனை ராதிகா பார்த்து டென்ஷன் ஆகிறார். எங்க வீட்ல இருக்குறவங்க சப்போர்ட் பண்ணல நான் என்னால இதுவரைக்கும் வந்திருக்க முடியாது என்று சொல்லி பேசுகிறார்.

மறுபக்கம் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ராதிகா உட்காந்து கொண்டு இருக்க கொஞ்ச நேரம் கழித்து மயூ டிரஸ் எப்படி இருக்குமா என்று கேட்கிறார். சூப்பரா இருக்குமா என்று சொல்ல இன்னைக்கு எங்க போகலாம் டின்னர் போலாமா இல்ல தியேட்டர் போயிட்டு டின்னர் போலாமா என்று ராதிகா கேட்கிறார் வேண்டாம் மம்மி நீங்க சந்தோஷமா இருந்தீங்கன்னாவே போதும் என்று சொல்ல மயூவை கட்டிப்பிடித்து ராதிகா கண்கலங்குகிறார். சாரி மயூ என் வாழ்க்கையில நான் எடுக்கற முடிவு எல்லாமே தப்பா தான் இருக்கு ஆனா அது உன்ன அந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்று எனக்கு தெரியும் இதுக்கு மேல நான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன் உன்னை கஷ்டப்பட விடமாட்டேன் உன்னை சந்தோஷமா வச்சுப்ப உனக்கு நான் இருக்கேன் லைஃப் ஃபுல்லா உன்ன ஹேப்பியா வைத்திருப்பேன் என்று சொல்லுகிறார்.

கொஞ்ச நேரம் கழித்து ராதிகாவின் அம்மா பால் பாயாசம் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க மயுவிடம் கொடுத்துவிட்டு ராதிகாவிடம் கொடுக்க எனக்கு வேண்டாம் என்று சொல்ல புரிய வைத்து விடுகிறார் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டவுடன் ராதிகாவின் அம்மா மாப்பிள வந்துட்டாரு என்னதான் இருந்தாலும் மயுவோட பிறந்தநாளுக்கு எப்படி வராமல் இருக்கும் போறாரு என்று சொல்ல போய் கதவை திறந்து பார்க்கியா நிற்கிறார்.

ராதிகாவின் அம்மா நீ எதுக்கு இங்க வந்த என்று கேட்க ராதிகாவை பார்த்து உள்ளே வரலாமா என்று பாக்யா கேட்கிறார் பிறகு ராதிகா ராதிகாவின் அம்மாவை உள்ளே வருமாறு சொல்லிவிட்டு நீங்க வாங்க என்று கூப்பிடுகிறார் என்ன விஷயமா வந்தீங்க என்று ராதிகா கேட்க மயூவ தான் பார்க்க வந்தேன். இன்னைக்கு மயுக்கு விஷ் பண்ண தான் வந்தேன் என்று சொல்லுகிறார். பிறகு பாக்கியா கிப்ட் கொடுத்துவிட்டு மயூக்கு விஷ் பண்ணுகிறார்.

சரி நான் கிளம்புறேன் என்று பாக்கியா கிளம்ப ராதிகா மயிலே உள்ளே அனுப்பிவிட்டு பாக்யாவிடம் நீங்க கிடைக்கிற டைம்ல கோபியோட மனைவியா இருந்து அவர் கூட வாழனும்னு ஆசைப்படுறீங்களா என்று கேட்க அது இந்த ஜென்மத்துல நடக்காது என்று பாக்யா உறுதியாக சொல்லுகிறார். அப்போ நீங்க மேடையில போய் ப்ரவுடா நின்னது எப்படி என்று கேட்க நான் இனியாவோட அம்மாவா மட்டும் தான் போய் நின்னேன் எப்பவுமே கோபிநாத் ஓட மனைவியா நிக்கல என்று சொல்லுகிறார்.

வீட்டில் ஜெனி மற்றும் செல்வியிடம் பேசிக் கொண்டிருக்க பாக்யா டின்னருக்கு இனிய புடிச்ச பிரைட் ரைஸ்சும் டிராகன் சிக்கன் செய்ய வேண்டும் என்று பிளான் செய்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து கோபி இனியா செழியன் மற்றும் ஈஸ்வரி டின்னர் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருகின்றனர்.

கோபி பாக்கியாவிடம் என்ன சொல்லுகிறார்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? மயூவின் பிறந்த நாளுக்கு கோபி சென்றாரா?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்

baakiyalakshimi serial today episode update 23-12-2024

baakiyalakshimi serial today episode update 23-12-2024