மனோஜ் சொன்ன வார்த்தை,முத்து கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மனோஜ் சொன்ன வார்த்தையால், முத்து பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து ஜீவாவை பிக்கப் செய்து கொண்டு காரில் வந்து கொண்டிருக்கிறார். பிறகு என்ன இருவரும் பேசிக்கொண்டே வர முத்து இன்னும் எவ்வளவு நாள் இங்க இருக்கீங்க என்று கேட்க ஒன்று இல்லை இரண்டு வாரம் இருப்பேன் என்று சொல்லுகிறார் எனக்கு இங்கு ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கு அது முடிச்சிட்டு கிளம்பிடுவேன் என்று சொல்லுகிறார்.
போன தடவையே இதுக்காக தான் வந்த ஆனா ரெண்டு திருட்டு பசங்களாக என்னால பண்ண முடியல என்று சொல்லுகிறார். பிளாட்டில் வெயிட் பண்ணுங்க நான் ரெடி ஆயிட்டு வந்துடறேன் என்று சொல்ல முத்துவும் சரி என்று சொல்லுகிறார். மறுபக்கம் விஜயா மற்றும் அண்ணாமலை இருவரும் வெளியில் வாக்கிங் வர அந்த வீட்ல இருக்கும்போது நான் கூப்பிட்டா வரவே மாட்ட இப்ப எப்படி வந்த என்று கேட்க, அங்க ரோட்ல எப்ப பார்த்தாலும் வண்டிங்க போயிட்டு இருக்கோம் ஒரே புகை ஸ்மெல்லா இருக்கும் அதெல்லாம் எனக்கு செட்டாகாது ஆனால் இங்கே இவ்வளவு அமைதியா இருக்கு பாத்தீங்களா என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஓடுகிறார். எப்ப பாத்தாலும் மனோஜ் மட்டும் தான் தூக்கி வச்சு பேசுவியா என்று கேட்க அவன் தான் பணக்காரன் ஆகிய எல்லாம் பண்றாங்க அவனை மாதிரி நீங்களும் இருந்திருந்தால் இந்த இடத்தில் நாலு வீடு வாங்கி இருக்கலாம் என்று விஜயா சொல்ல, அப்படி இருந்தா உன்ன சமாளிச்சு இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு அழைத்து சென்று விடுகிறார். அண்ணாமலை அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருக்க உங்க கூட நடக்கறதுக்கு முன்னாடி போயிடலாம் என்று சொல்லி விஜயா முன்னாள் நடந்து சென்று விடுகிறார். அண்ணாமலை இளநீர் கடையை பார்த்து அங்கே இளநீர் வாங்க புதுசா இருக்கீங்க வீடு ஏதாவது வாங்கி இருக்கீங்களா என்று கேட்கிறார். ஆமா என் பையன் அங்க முனையில் இருக்க அந்த வீடை வாங்கி இருக்கான் என்று சொல்ல அந்த வீடா என்று இளநீர் கடைக்காரர் யோசிக்கிறார். அண்ணாமலை சென்ற பிறகு ஒருவருக்கு போன் பண்ணி பேசுகிறார்.
மறுபக்கம் ஜீவாவை அழைத்துக் கொண்டு ரிஜிஸ்டர் ஆபீசுக்கு முத்து வர கொஞ்ச நேரம் கழித்து ரோகினி மனோஜ் மற்றும் அவரது நண்பர் மூவரும் ரிஜிஸ்டர் ஆபீசுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை விசாரிக்க வருகின்றனர் முத்து வெளியில் இருப்பதை பார்த்து மனோஜின் நண்பர் முத்துவை கூப்பிட , மனோஜ் அவனையே கூப்பிட்டீங்க என்று கேட்கிறார் பிறகு முத்து வந்தவுடன் இங்கே என்னடா பண்ற என்று கேட்க ரிஜிஸ்ட்ரேஷனுக்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரிக்க வந்ததாக சொல்ல மனோஜ் நம்பர் நீங்களும் வாங்க முத்து என்று கூப்பிடுகிறார். உடனே மனோஜ் அவன் எதுக்கு என்று கேட்க நீ சொன்னாலும் நான் வரமாட்டேன் என்று சொல்லுகிறார். உடனே அப்பா கிட்ட சொல்லி வீடு விக்க முடியாதுன்னு சொல்லிட்ட இல்ல இன்னும் 3 மாசத்துல நான் இந்த வீட்டை வாங்கி ரிஜிஸ்டர் பண்றதுக்கு இங்க வருவேன் என்று சவால் விடுகிறார். நான் மனசுல வச்சுக்க மாட்டேன் மறந்துடுமா நீ எனக்கு whatsapp அனுப்பு எடுத்து எடுத்து பாத்துக்குறேன் என்று செய்கிறார். மூவரும் உள்ளே செல்ல ஜீவா அவர்களைப் பார்த்து கடுப்பாகி வெளியே வருகிறார்.
உடனே முத்துவிடம் காரை எடுக்கச் சொல்லி யாரைப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அவங்கள பாத்துட்டேன் இதுக்கு மேல எங்கயோ வேணா வீட்டுக்கு போங்க அப்சட்டா இருக்கு என்று சொல்லி வீட்டிற்கு வருகிறார். பெட்டியை மேலே கொண்டு வரச் சொல்ல முத்து எடுத்துச் சென்று கொடுக்க ஜீவா அவருக்கு கூலிங் கிளாஸ் வாங்கி வந்ததாக கொடுக்கிறார். அவருக்கு மட்டும் இல்லாமல் மீனாவிற்கும் சேர்த்து வாங்கியுள்ளதாக சொல்லி கொடுக்கிறார். முத்து கண்ணாடியுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள என் பொண்டாட்டி நம்ப மாட்ட அதனால நீங்க கொடுக்கிற மாதிரி நான் வாங்குற மாதிரி ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்று சொல்லி ஜீவாவுடன் போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறார்.
பிறகு மனோஜ் ரோகினி உட்கார்ந்த பேசிக்கொண்டிருக்க ஒரு கார் வந்து நிற்கிறது.அந்த காரில் இருந்து இறங்கும் நபர் யார்? மனோஜ் என்ன செய்யப் போகிறார்?குடும்பத்தாரின் முடிவு என்ன?என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.