இனியாவின் கேள்விக்கு சுதாகர் சொன்ன பதில், பாக்கியாவுக்கு வந்த சிக்கல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவின் கேள்விக்கு சுதாகர் பதில் சொல்ல பாக்கியாவிற்கு புது சிக்கல் ஒன்று வந்துள்ளது.

baakiyalakshimi serial today episode update 14-05-25
baakiyalakshimi serial today episode update 14-05-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க இனியா சுதாகரிடம் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று சொல்லுகிறார் என்ன விஷயமா என்று கேட்க ரெஸ்டாரன்ட் விஷயத்துல என்ன நடந்தது என்று கேட்க எதைப்பற்றி கேட்கிற என்று சொல்லுகிறார் இல்ல அம்மா மூணாவது ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்றாங்கன்னு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் ஆனா அங்க போய் பார்க்கும் போது தான் எனக்கு தெரிஞ்சது என்று சொல்ல நானும் அந்த இடத்தை பார்த்தமா ரொம்ப கஷ்டமா இருந்தது என்று சொல்லுகிறார். எனக்கு இடம் கூட பிரச்சனை இல்ல ஆனா அம்மாவோட ரெண்டு ரெஸ்டாரன்ட் என்ன ஆச்சு நீங்க அவங்க கிட்ட இருந்து வலுக்கட்டாயமா வாங்குனீங்களா என்று கேட்கிறார்.

உடனே நித்திஷ் அம்மா நீ சின்ன பொண்ணு இனியா பிசினஸ் பத்தி அவங்க பேசிப்பாங்க நீ சாப்பிடு என்று சொல்ல இனியா நீங்க கட்டாயப்படுத்தி வாங்கினீங்களா என்பதைப் போலவே பேசிக் கொண்டிருக்க நிதிஷ் கோபப்பட்டு எதுக்கு அப்பா கிட்ட குரல உசத்தி பேசிகிட்டு இருக்க நாங்க யாருமே அது மாதிரி பேசுனது கிடையாது அப்பா கிட்ட சாரி கேளு என்று சொல்ல இனிமையாவும் சாரி கேட்கிறார் நீ எதுக்குமா அதெல்லாம் கேட்கிற என்று சொல்லுகிறார். உடனே நித்திஷிடம் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு புதுசு எதுக்குடா அப்படி கோபப்படுற என்று கண்டிக்க பிறகு ரெஸ்டாரன்ட் முதலில் பெயர் மாற்றம் மட்டும்தான் செய்யப் போறேன்னு நினைச்சோம் ஆனால் உங்க அம்மா தேவை இல்லாம பிரச்சினை பண்ணிக்கிட்டு இருந்தாங்க அதனாலதான் காசு கொடுக்க வேண்டியதா ஆயிடுச்சு காசு கொடுத்த விஷயத்தை பற்றி உங்க அம்மா எதுவும் சொல்லலையா எல்லாத்தையும் பேசிட்டு என் மேல என் கோவமா இருக்காங்கன்னு கேட்டு சொல்லு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எழுந்து சென்று விடுகின்றனர்.

மறுபக்கம் பாக்கியா ஹோட்டலில் வேலைகளை முடித்துவிட்டு செல்வவியுடன் கிளம்பப் போக ஏன் சோகமா இருக்க என்று கேட்கிறார் எனக்கு இணையாக நினைத்துதான் யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் ஆகாது நம்ம கிளம்பலாம் என்று முடிவு எடுத்து கிளம்பும்போது ஏரியா கவுன்சிலர் இரண்டு ஆட்களுடன் வந்து சாப்பாடு வேண்டுமென்று சொல்லுகிறார் இல்ல நாங்க எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு அதுக்கு மேல சமைக்க முடியாது என்று சொல்ல வந்த உங்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாதுன்னு சொன்ன ஹோட்டல் எப்படி நல்லா போகும் அதெல்லாம் முடியாது எங்களுக்கு சாப்பாடு கொடுத்தே ஆக வேண்டும் என்று முடிவோடு உட்கார்ந்து விடுகிறார் உடனே பாக்கியா எல்லாமே தீர்ந்து போச்சு எதுவுமே இல்லை என்று சொல்ல செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகுது சீக்கிரம் செய்யுங்க என்று சொல்லிவிட்டு எங்களுக்கு மூன்று முட்டை தோசை வேண்டும் என்று சொல்லி சொல்ல இது வெஜ் ஹோட்டல் முட்டை தோசை எல்லாம் கிடைக்காது என்று சொல்லுகிறார் உடனே என்னமா எது சொன்னாலும் முடியாது கிடையாதுன்னு சொல்ற என்று சொல்லிவிட்டு அவரது ஆட்களை அனுப்பி முட்டையை வாங்கிட்டு வர சொல்லுகிறார்.

பாக்யாவும் வேறு வழி இல்லாமல் சமைக்க போக கொஞ்ச நேரத்தில் அவர்கள் சரக்கு பாட்டில்களை எடுத்து வைத்து ஊத்திக் கொண்டிருக்க உடனே பாக்யா கோபப்பட்டு என்ன சார் இதெல்லாம் கடைல குடிச்சுகிட்டு இருக்கீங்க இங்க எல்லாம் குடிக்க கூடாது வெளியே போங்க என்று சொல்ல நாங்க வெளியே போன கட நாளைக்கு திறக்க முடியாது கடையை பூட்டி சாவிய ஓனர்கிட்ட கொடுத்துட்டு போயிட்டே இருப்போம் என்று சொல்லி மிரட்டுகின்றனர். உடனே பாக்யா மற்றும் செல்வி எவ்வளவு சொல்லியும் கேட்காததால் அந்த நேரம் பார்த்து ஆகாஷ் செல்விக்கு போன் போட்டு என்னமா இன்னும் வரல என்று கேட்க ஹோட்டல் தான் இருக்கேன் என்று சொல்ல சரி நான் வரேன்னா போனை வைக்கிறார்.

பிறகு பாக்கியா எல்லோருக்கும் ஆம்லெட் போட்டுக் கொடுக்க அந்த நேரம் பார்த்து செல்வின் மகன் வந்து என்னம்மா ஹோட்டல்ல உட்கார்ந்து குடித்துக்கொண்டிருக்கிறார்கள் எதுவும் சொல்லலையா என்று கேட்க வம்பு பண்றாங்க இதுவும் கேட்க மாட்டாங்க என்று சொல்ல ஆகாஷ் நான் கேட்கிறேன் என வந்து எதுக்கு இப்படி ஹோட்டல்ல குடிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்க உன் ஆள் பத்தலன்னு சப்ளையர் வர சொல்லிட்டீங்களா என்று கேட்க அவன் சப்ளையர் இல்லை என்னோட மகன் என்று செல்வி சொல்லுகிறார்.

ஆகாஷ் என்ன கேட்கிறார்? அதற்கு அவர்களின் பதில் என்ன? எழில் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 14-05-25
baakiyalakshimi serial today episode update 14-05-25