முத்துவிற்கு எதிராக நின்ற குடும்பத்தினர், மீனா கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்துவிற்கு எதிராக குடும்பத்தினர் நிற்க,மீனா பதிலடி கொடுத்துள்ளார்.

siragadikka asai serial today promo update 14-05-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்தவுடன் எல்லோரும் முத்துவால் குடும்பத்தில் மானம் மரியாதை போய்விட்டது என்றபடி அனைவரும் பேசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் கோபப்பட்டு என்ன நடந்துச்சுன்னு தெரியாம நீங்க பாட்டுக்கு அவர ஒரு குற்றவாளி மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க என்று சொல்ல என்ன நடந்துச்சு நீங்க சொல்லுங்க மீனா என்று ஸ்ருதி சொல்லுகிறார் என்னங்க சொல்றது இவரோட கார்ல பிரேக் பிடிக்காம போயிருக்கு என்று சொல்லி அழுகிறார் இவருக்கு ஏதாவது ஆகி இருந்தா என்ன பண்றது கடவுள் புண்ணியத்துல எதுவும் நடக்கல. ஸ்கூல் பசங்க மேல மோதிர கூடாதுன்னு வண்டியை திருப்பம் போது அது அந்த போலீஸ்காரர் வண்டியில் இடிச்சிடுச்சு அவரை இவர் மேல இருந்த கோவத்துல இப்படி பண்ணிட்டாரு என்று சொல்லுகிறார்.
ஆனால் அப்போதும் முத்து தான் தப்பு பண்ணி இருப்பான் என்பது போலவே பேச மீனா அழுது கொண்டே அவரும் இந்த வீட்ல ஒரு ஆள் தானே அவர் உங்களை எல்லாம் என்ன பண்ணிட்டாரு அவர் உயிர் என்ன ஆனாலும் நீங்க எதுவும் கவலைப்பட மாட்டீங்களா என்றெல்லாம் சொல்லி அழுகிறார் யாரோ அறிவில்லாதவங்க நடந்தது வீடியோ எடுத்து போட்டு இருக்காங்க என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் ஸ்ருதியின் அம்மாவை பார்க்கின்றனர். நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத சுருதி இந்த வீட்ல நடக்கிற சின்ன பிரச்சனைக்கு உங்க அம்மா வந்துடறாங்க அதுவும் இவரை எப்ப பார்த்தாலும் ஒரு தப்பான ஆளாவே சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார்.
மனோஜ் குடிச்சுட்டு வண்டி ஓட்டி இருப்பான் என்று சொல்ல அண்ணாமலை கோபப்பட்டு ஒரு வார்த்தை பேசண அறைஞ்சிடுவேன் என சொல்ல தப்பு பண்ணுது அவன் இவன் எதுக்கு சொல்றீங்க என்று விஜயா கேட்க நீ வாய மூடு உன் பையன் தானே கார்ல பிரேக் பிடிக்கலைன்னு சொல்றாங்க அடி ஏதாவது பட்டிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டியா என்று விஜயாவை அடக்கிவிட்டு ஸ்ருதியின் அம்மாவிடம் உங்க பொண்ணு இந்த வீட்ல நல்லா தான் இருக்கா ஒரு நாளாவது இந்த வீட்ல எனக்கு சந்தோஷம் இல்லைன்னு வந்து உங்க கிட்ட சொல்லி இருக்காளா அப்படி சொல்ல மாட்டா நீங்க எல்லாம் பண்றது எல்லாம் பார்த்தா மீனா சொல்ற மாதிரி தான் தெரியுது என்று சொன்ன ஸ்ருதி அவங்க அம்மாவை அழைத்துக் மலையாளத்தில் என்ன விஷயத்துல தலையிடாதீங்க என்று சொல்லுகிறார். விஜயா என்னடா தெலுங்குல பேசுறாங்க என்று கேட்க தெலுங்குல மலையாளத்துல பேசுறாங்க என்று சொன்னவுடன் சுருதிடம் வந்து நீ யாரமா திட்டு இருக்க என்று கேட்க என்னதான் திட்றா என்று ஸ்ருதியின் அம்மா சொல்லுகிறார். அவங்க விஷயத்துல தலையிடக்கூடாதுன்னு சொல்றா என்று சொல்லு அம்மாவை எதுக்குமா அப்படி சொல்ற என்று கேட்கிறார் அதற்கு ரவி ஸ்ருதியோட அம்மா என்றதுனால தான் அமைதியா இருக்கேன் அதுவும் லிமிட்டோட இருந்து கட்டும் என்று சொல்லுகிறார். உடனே ஸ்ருதியின் அம்மா அங்கிருந்து சென்றுவிட அண்ணாமலை முத்து மீனாவிடம் கார் பற்றி கேட்க கார் வந்துரும் ஆனால் லைசன்ஸ் தான் கேன்சல் பண்ணிட்டாங்க என்று சொல்ல விஜயா வேலையும் போச்சா என்று சொல்ல அண்ணாமலை முறைத்தவுடன் சென்று விடுகிறார்.
எல்லாம் சரியா போயிடும் பாத்துக்கலாம் என்று அண்ணாமலை சென்றுவிட ஸ்ருதி முத்து மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். மறுபக்கம் சிட்டி அப்போ அவன் யார் மேலயும் மோதல அவனுக்கு எதுவும் ஆகல அப்படித்தானே என்று சொல்லி அடியாட்களை அடிக்கிறார். பிறகு கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் வந்து திருட்டு நகை ஒன்றை கொடுத்து இதெல்லாம் நீ கமிஷன் எடுத்துக்கிட்டு ஏதாவது விட்டுக் கொடு என்று சொல்லுகிறார் பிறகு அவரிடம் சரியென சொல்லி அனுப்பிவிட பி ஏ திருட்டு நகை எப்படி விற்க முடியும் என்று கேட்க அதற்குத்தான் நம்மகிட்ட ஒரு ஆடு இருக்கு என்று ரோகினியை சொல்லுகின்றனர்.
மறுபக்கம் முத்துவும்,மீனாவும் இன்ஸ்பெக்டர் சந்திக்க அவர் என்ன சொல்லுகிறார்? முத்து பதில் என்ன? என்ன நடக்கப் போகிறது? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today promo update 14-05-25