சுந்தரவல்லி போட்ட கண்டிஷன், சூர்யா கேட்ட கேள்வி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 14-05-25
நேற்றைய எபிசோடில் நந்தினி தூங்கிக் கொண்டிருக்க சிங்காரம் போன் போட்டு வேலைக்கு சேர்ந்த விஷயத்தை சொல்ல, சரி போயிட்டு எந்த ஏரியா எங்க இருக்குன்னு சொல்லு என்று சொல்லிவிட்டு பணியில் இருந்தா நெஞ்சு சளி வரும் குல்லா போட்டுக்கோ என்று சொல்ல சரி நான் கிளம்புறோமா என்று சொல்லி போனை வைக்கிறார். செக்யூரிட்டி சிங்காரத்தை சுந்தரவல்லி வீட்டுக்கு வந்து வேலை பார்க்கச் சொல்ல சிங்காரம் இந்த வீட்டிலயா என தயங்க, ஏன் இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு தெரியுமா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டு வேலை பார்க்க வருகிறார். ஏற்கனவே இருக்கும் செக்யூரிட்டி இந்த வீட்டில் எப்படி செக்யூரிட்டி வேலை பார்க்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறார்.
சூர்யா சாரோட கார் வரும்போது கரெக்டா திறந்து விடு அவர் குடிச்சிட்டு வர்றதுனால கேட்டை கூட ஒடச்சிட்டு போய்டுவாரு அப்புறம் சம்பளத்துல தான் புடிச்சுப்பாங்க என்று சொல்லிவிட்டு கவனமாக பார்த்துக்கொண்டு நான் காலையில வந்து மாத்திக்கிறேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சிங்காரமும் பயத்தில் குல்லாவை போட்டுக்கொண்டு உட்கார்ந்து விட மறுநாள் காலையில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க நந்தினி வாசல் தெளிக்க வெளியில் வருகிறார். உடனே சிங்காரம் முழித்துக் கொண்டு குல்லாவால் முகத்தை மூடி கொள்கிறார். நந்தினி கோலம் போட்டு முடித்துவிட்டு கிச்சனுக்கு சென்று கல்யாணத்தை கூப்பிடுகிறார். ஆனால் கல்யாணம் வராததால் தூங்கிக் கொண்டு இருப்பதை கவனித்து நந்தினி வந்து எழுப்புகிறார். உடனே கல்யாணம் கனவில் பதறி எழுந்துக்க என்னாச்சு நந்தினி கேட்க கனவுல லாட்டரி சீட் ஆயிடுச்சு கோடி கோடியா பணம் கிடைச்சுது மூட்டையில் கட்டலாமா? பெட்டியில் கட்டலாமானு கேட்டாங்க அதுக்குள்ள நீ வந்து எழுப்பிட்ட என்று சொல்லுகிறார்.
சரி நீங்க எழுந்து வாங்காம டீ போடுறேன் என சொல்லி நந்தினி டீயை போட்டு கல்யாணத்திடம் கொடுத்துவிட்டு வாசலில் இருக்கும் சிங்காரத்தை கவனித்து டீ எடுத்துக்கோங்க அண்ணே என்று சொல்லி கொடுக்க சிங்காரம் கைகள் நடுக்கத்துடன் எடுக்கிறார். ஏன் கை நடுங்குது குளிர்ல இருக்கீங்களா டீ குடிங்க சரியா போயிடும் ஏதாவது தேவை என்றால் கேளுங்கள் எங்க அப்பாவும் இன்னைக்கு தான் செக்யூரிட்டி வேலைக்கு போய் இருக்காரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் சூர்யா தூங்கி எழுந்து தூக்க கலகத்தில் பாத்ரூமுக்கு சென்று பிரஷ் எடுத்துக் கொண்டு வந்து பல் தேய்க்க நந்தினி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு செடிகளுடன் பேசுகிறார். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு ரூமுக்கு வந்த நந்தினி சூர்யா பல் விளக்குவதை பார்த்து என்ன நம்ம பிரஷ் மாதிரி இருக்கு என்று சந்தேகப்பட்டு பாத்ரூமில் பார்க்க சூர்யா நந்தினியின் பிரஷில் பல் விளக்கி கொண்டிருக்கிறார்.
இதனால் நந்தினி சூர்யாவின் பிரஷ்ஷில் பேஸ்ட் போட்டு எடுத்துக்கொண்டு போய் கொடுக்க, நீங்க என்னோட பிரஸ்ல பல்லு விலக்கிட்டு இருக்கீங்க அதை தூக்கிப் போட்டுட்டு இந்த பிரஷ்ல விளக்குங்க என்று சொல்ல அதெல்லாம் பரவாயில்லை நான் பாதிக்கு மேல விலகிட்ட பரவால்ல என்று சொல்ல நந்தினி எனக்கு ஒரு மாதிரியா இருக்கு நீங்க இந்த பிரஷ்ல விளக்குங்க என்று சொல்ல சூர்யா கேட்காமல் விளக்கிக் கொண்டே இருக்க நந்தினி கையில் இருக்கும் பிரஷ்ஷை புடுங்கிவிட்டு சூர்யாவிடம் அவருடைய பிரஷ்சை கொடுக்கிறார். நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க விஜி போன் போட்டு தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட வேலை விஷயமா கேட்டு இருந்தேன் அவரும் உடனே நமக்கு ஏத்த மாதிரி இட்லி இடியாப்பம் செய்து கொடுங்கன்னு சொல்லி இருக்காரு என்று சொல்ல நந்தினி ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் எப்படி கடன் அடைக்க போறன்னு நெனச்சேன் என்று சொல்ல, இது மட்டும் இல்லாம அவருக்கு நிறைய கடை இருக்கு எந்த பிரச்சனையும் இல்லாம இருந்தா அதுலயும் செஞ்சு குடுக்கலாம்னு சொல்லி இருக்காரு என்று சொல்ல நந்தினி ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
அப்புறம் இன்னொரு விஷயம் அவர் முக்கியமா மாஸ்டர் வைக்காததற்கு அவங்க டைமுக்கு கொடுக்கிறது இல்லன்னு தான் ஆனா நம்ம கரெக்டான டைமுக்கு செஞ்சுடனும் என்று சொல்ல, அதெல்லாம் பண்ணிடலாம் என்று சொல்ல இது எல்லாத்துக்கும் பணம் இருக்கா என்று சொல்ல அவங்க எல்லாத்துக்கும் அட்வான்ஸ் கொடுத்துட்டாங்க நம்ம இன்னைக்கு ஆரம்பிச்சிடலாம் வந்துடுறியா என்று கேட்க இப்போ உடனே வேலை முடிச்சுட்டு வந்துட்டேன் என போனை வைக்கிறார். அருணாச்சலம் உட்கார்ந்து கொண்டிருக்க நந்தினி விஜி அக்கா வீட்டுக்கு போகிறேன் என்று சொல்ல போயிட்டு வாம்மா என்று சொல்ல இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இல்ல டெய்லியும் போற மாதிரி இருக்கும் காலைல போனா சாயந்திரம் தான் வருவேன் என்று சொல்ல என்னமா ஆபீஸ் வேலை மாதிரி சொல்ற என்று கேட்க ஆமா வேலைக்கு தான் போறேன் ரெண்டு லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கி இருக்கேன் அதற்கு வடிகட்டணும் என்று சொல்ல சரி போயிட்டுவாமா என்று சொல்லி அனுப்புகிறார். உடனே இதை கவனித்த சுந்தரவல்லி இந்த வீட்ல இருந்துகிட்டு அவ வேலைக்கு போகணும்னு சொல்றா நீங்களும் யோசிக்க மாட்டீங்களா எல்லாத்துக்கும் சரின்னு தலையாட்டிடுவீங்களா என்று கேள்வி கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் அவர் வேலைக்கு போகக்கூடாது அதுவும் இந்த வீட்டிலிருந்து போகக்கூடாது என்று கோபமாக சொல்ல சூர்யா ஏன் போகக்கூடாது ஏதோ அவப்பட்ட கடனை அவளே அடைக்கணும்னு நினைக்கிறா அத செஞ்சிட்டு போட்டோமே யாருக்கும் அதுல என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.
மறுபக்கம் சூர்யா நந்தினி காரில் அழைத்துச் செல்ல நந்தினி எனக்கு மறுபடியும் வீட்டுக்கு போகும்போது அவங்க என்ன சொல்லுவாங்க ஏது சொல்லுவாங்கன்னு தான் ஓடிக்கிட்டு இருக்கோம் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 14-05-25