கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் கோபி..!

கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தை பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இனியா சுதாகரை சந்திக்க ஹோட்டலுக்கு வர அங்கு நிதிஷ் இருக்க இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்திற்கு மேல் நிதிஷ் இனியா கையை பிடித்து இழுத்த இனியா தள்ளிவிட தலையில் அடிபட்டு மயங்கி விழுகிறார்.இனியா எழுப்பியும் நிதிஷ் எழுந்திருக்காமல் இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
ஏற்கனவே பாக்யாவும் கோபியும் சீரியல் முடிவுக்கு வரப்போவதாக வீடியோக்களை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் கோபி இறுதிநாள் ஷூட்டிங் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியலை மிஸ் பண்ணுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram