Atlee With Rahman
Atlee With Rahman

அட்மின் அடுத்த படம் பற்றிய அப்டேட் தெரியவந்துள்ளது.

Atlee With Rahman :தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பின்னர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் அட்லி.

அடுத்த வருஷம் இதே நாளில் நாம படம் பண்றோம்.. மாஸ்டர் ரத்ன குமாருக்கு வாக்குக் கொடுத்த பிரபல நடிகர் – ஆதாரங்களுடன் இதோ.!

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தளபதி விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார். ஆனாலும் விஜய் உடனான கூட்டணியில் அட்லீக்கு கொஞ்சம் சலிப்பு ஏற்படவே இல்லை.

மீண்டும் இதே கூட்டணி வெகுவிரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் அட்லியின் அடுத்த ஹீரோ யாராக இருப்பார்கள் அது என்ன பருமனாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் அட்லி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக அட்லியின் அடுத்த படத்திற்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

அரை டவுசர் மற்றும் பனியனில் குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட வேதிகா – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதனால் தான் அட்லி இவ்வாறு சூசகமாக தெரிவித்துள்ளார் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

அட்லி விஜயை வைத்து இயக்கிய தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களுக்கும் ரகுமான் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்திற்கு முன்பாக அட்லி சோலோவாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.