Rathna Kumar Next With Vaibhav
Rathna Kumar Next With Vaibhav

அடுத்த வருஷம் இதே நாளில் நாம படம் பண்றோம் என மாஸ்டர் பட திரைக்கதை இயக்குநருக்கு பிரபல நடிகர் வாக்கு கொடுத்துள்ளார்.

Rathna Kumar Next With Vaibhav : தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். இந்த படத்திற்கு பிறகு ஆடை என்ற படத்தை இயக்கிய இவர் தற்போது மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

பயப்படாத என்ன நடந்தாலும் நீதான் டைரக்டர்.. அறிமுக இயக்குனருக்கு அஜீத் கொடுத்த நம்பிக்கை – வெளியான தகவல்.!

இன்று மேயாத மான் வைபவ்விற்கு பிறந்தநாள் என்பதால் ரத்னகுமார் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் இதே தினத்தில் தான் மேயாத மான் திரைப்படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது. வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி என கூறியுள்ளார்.

இதனையடுத்து வைபவ் இந்த பதிவிற்கு அளித்துள்ள பதிலில் அடுத்த வருஷம் இதே நாளில் படம் பண்றோம் என கூறியுள்ளார். இதற்கு ரத்னகுமாரும் பண்றோம் பிண்றோம் என பதில் கொடுத்துள்ளார்.

இதனால் ரத்னகுமாரின் அடுத்த படம் வைபவ் உடன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.