அர்ஜுன்தாஸ் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள Silver Tree Studios நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
Silver Tree Studios மற்றும் POP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், ‘Production No.1’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகிறது. இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களுடன் கூடிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது.

மேலும், கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை விஜய் எம்.பி. மற்றும் சண்முக பிரியன் இணைந்து தயாரிக்கின்றனர். POP Entertainment சார்பில் பர்வீன் பானு இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
முதல் படைப்பிலேயே வித்தியாசமான கதைக்களம் மற்றும் திறமையான கலைஞர்களுடன் களமிறங்கியுள்ள Silver Tree Studios, தொடர்ந்து புதிய கதைகள், யோசனைகள் மற்றும் திறமையான படைப்பாளர்களை இணைத்து தரமான பொழுதுபோக்கு படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
