Anjana Answer

Anjana Answer : சத்தியமா மீண்டும் சன் டிவி-க்கு வர மாட்டேன் எனவும் மணிமேகலை என்னுடைய தங்கச்சி இல்லை எனவும் கூறியுள்ளார் அஞ்சனா.

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் சேனலில் பிரபல தொகுப்பாளியாக சுமார் 10 வருடங்கள் பணி புரிந்தவர் அஞ்சனா. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பணி புரிந்து வந்த இவர் கர்பமானதும் டிவியில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்து குழந்தை பிறந்த பிறகு ஜீ தமிழ் டிவியில் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் ரசிகர்களிடம் உரையாடியுள்ளார்.

என்னுடைய கடைசி ஷோ இவருடன் தான் – டிடி-யின் ஆசை.!

அப்போது மீண்டும் எப்போது சன் மியூசிக்கு வருவீர்கள், உங்கள் தங்கச்சி மணிமேகலையுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவீர்கள்? என கேட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

அதற்கு மணிமேகலை என்னுடைய தங்கச்சி இல்லை. மீண்டும் சன்-டிவிக்கு வர மாட்டேன். 10 வருடங்கள் அங்கு இருந்து விட்டேன். எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Anjana

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.