எந்தக் காலத்திலும் காதலின் உணர்வியல் மாறாது. ஆனால், அறிவியலால் அங்கே காட்சிகள் மாறும், அவ்வளவே.
அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, கவுரி கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசை.
1.52 நிமிடம் ரன் டைம் கொண்ட lik டீசரில் இந்த கதை 2040-ல் நடைபெறும் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. எதிர்கால சென்னை எப்படி இருக்கும் என தனது கிரியேட்டிவிட்டியை தெறிக்க விட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அடையாறு பாலம், மிஷன் இம்பாஸிபிள் – 14, மின் வாகன பயன்பாடு, ‘ரன்னிங், டெக்ஸ்டிங், சைக்கிளிங்’ செல்பவர்களுக்கு என பிரத்யேக பாதை, தலைவர் 189 படம், நவீன வடிவில் காட்சி அளிக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது.
கண்டதும் காதலில் மூழ்கும் காதலர்கள் எப்படி பல்வேறு தடைகளை கடந்து வாழ்க்கையில் இணைகிறார்கள் என்பதை தனது பாணியில் சொல்லி உள்ளார் விக்னேஷ் சிவன். பிரதீப், எஸ்.ஜே.சூர்யா இருவரும் டீசரின் ஃப்ரேம்களில் ஸ்கோர் செய்துள்ளனர். குறிப்பாக, டிசரின் ஓபனிங்கில் மழை நேரத்தில் குடையுடன் செல்லும் பிரதீப்பின் அருகே, புன்னகைத்து நுழையும் ஹீரோயின் காட்சி ரசிக்க வைக்கிறது.