வணங்கான் : மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

வணங்கான் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Vanangaan Movie Box Office Collection Update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வணங்கான் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் பாலா இயக்கத்திலும் சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் உருவான இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் அருண் விஜய் நடித்திருக்கிறார்.

மேலும் சமுத்திரகனி, மிஸ்கின் ,ரோஷினி பிரகாஷ், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மூன்று நாள் முடிந்துள்ள நிலையில் உலக அளவில் 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொங்கல் விடுமுறையை தொடர்ந்து வசூலில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vanangaan Movie Box Office Collection Update
ArunVijayBalabox officeGVPrakashvanangaan movieVanangaan Movie Box Office Collection Updateசமுத்திரகனிசுரேஷ் காமாட்சிபாலாமிஸ்கின்ரோஷினி பிரகாஷ்வணங்கான்