இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல..தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மாற்றம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


thug life movie audio launch release date change

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்பு, திரிஷா , ரவி மோகன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜூன் ஐந்தாம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ஏற்கனவே மே 16ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று பட குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் கலை காத்திருக்கலாம் இந்தியா முதலில் வரவேண்டும்.நமது நாட்டின் எல்லையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு மே 16ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியிட்டை மீண்டும் திட்டமிட முடிவு செய்துள்ளதாக சொல்லி உள்ளார்.

நமது தாய் நாட்டை பாதுகாப்பதில் நமது வீரர்கள் தளராத துணிச்சலுடன் முன்னணியில் நிற்கும் நிலையில் இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல அமைதியான ஒற்றுமைக்கான நேரம் என்று நான் நம்புகிறேன்.புதிய தேதி பின்னர் மிகவும் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்

இந்த நேரத்தில் நமது நாட்டை பாதுகாக்க விழிப்புடன் நிற்கும் நமது ஆயுதப்படைகளில் துணைச்சலான ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றிய எங்கள் எண்ணங்கள் உள்ளன குடிமக்களாக நிதானத்துடன் ஒற்றுமையுடன் பதில் அளிப்பது நமது கடமை கொண்டாட்டம் சிந்தனைக்கு வழி வகுக்க வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Audio Launchchangedatemoviereleasethug lifethug life movie audio launch release date changeசிம்புதக் லைஃப்திரிஷாரவி மோகன்