இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள்..! உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது கமெண்ட் பண்ணுங்க..!

டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல் குறித்து பார்க்கலாம்.

this week trp in top 10 serials

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி சீரியல் களுக்கு ரசிகர்கள் அதிகம். வார வாரம் சீரியல்களுக்குள் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் அந்த வகையில் இந்த வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம் வாங்க.

வழக்கம் போல் முதலிடத்தில் கயல் சீரியலும் இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் உள்ளது.

ஆனால் கடந்த வாரம் ஐந்தாவது இடத்திலிருந்து மருமகள் சீரியல் இந்த வாரம் மூணாவது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளது. மூணாவது இடத்தில் இருந்த சிங்கப் பெண்ணே சீரியல் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

சென்ற வாரத்தைப் போலவே ஐந்தாமிடத்தில் சுந்தரி சீரியல் ஆறாம் இடத்தில் ராமாயணமும் இருக்கிறது. கடந்த வாரம் எட்டாவது இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

எட்டாவது இடத்தில் ரஞ்சனி சீரியலும் ஒன்பதாவது இடத்தில் ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலும் பத்தாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இடம் பிடித்துள்ளது.

இந்த டாப் 10 சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? நீங்கள் எந்த சீரியல் தொடர்ந்து பார்த்து வருகிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


this week trp in top 10 serials
this week trpthis week trp in top 10 serialstop 10 serialsகயல்சிங்கப் பெண்ணேடிஆர்பிமூன்று முடிச்சு