Browsing tag

thug life movie

கமல் மீது கோர்ட் கடும் சாடல்: ‘தக் லைஃப்’ ரிலீஸ் தொடர்பாக சமாதான கடிதம்..

கர்நாடக வர்த்தக சபைக்கு, கமல்ஹாசன் எழுதியுள்ள அவசர கடிதம் காண்போம்.. தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானது என கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சையாக வெடித்தது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால், தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. கமலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியிருந்தார். இதையடுத்து, தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் அனுமதி கோரி கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று […]

‘தக் லைஃப்’ பட ரிலீஸ் விவகாரம்: இன்று நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு என்ன?

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் ரிலீஸாகுமா? என்பதை இன்று கோர்ட் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு கூறும்போது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல்ஹாசன் உறுதியாக கூறுகிறார். ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், படத்தை வெளியிட அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, கர்நாடக அரசியல் தலைவர்களும் கன்னட அமைப்புகளும் அவரது கருத்தை கண்டித்துள்ளனர். திரையரங்குகளும் […]

இது தவறான ஒப்பீடு: ‘முத்த மழை’ பாடல் சர்ச்சை குறித்து சின்மயி விளக்கம்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படம் நாளை மறுநாள் 5-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘முத்த மழை’ என்கிற பாடலை மேடையில் சின்மயி பாடினார். அந்த வீடியோ வைரலானது. தமிழில் இந்தப் பாடலை தீ பாடியுள்ள நிலையில், தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்ஷனில் சின்மயி […]

இந்த வாரம், தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பற்றிப் பார்க்கலாம்.. தக் லைஃப்: மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. பான் இந்தியா படமான இதில் சிம்பு, திரிஷா, நாசர், அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பேரன்பும் பெருங்கோபமும்: இயக்குனர் தங்கர் பச்சான் மகன் விஜித் நாயகனாக நடித்துள்ள படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. சிவப்பிரகாஷ் […]

‘தக் லைஃப்’ படம் ரிலீஸ் தொடர்பாக, கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு..

கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் வெளியீடு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து உருவானது’ என்ற கருத்தை கமல்ஹாசன் தெரிவித்ததைத் தொடர்ந்து சர்ச்சையானது. இதனால் அவர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என கன்னட திரையுலகம் மற்றும் கன்னட அமைப்புகள் தடை விதித்துள்ளன. கன்னடர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ள […]

‘தக் லைஃப்’ டிரெய்லர் முத்தக்காட்சி சர்ச்சை: அபிராமி, திரிஷா விளக்கம்..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ டிரெய்லரில் கமல்-அபிராமி இடையேயான முத்த விவகாரம் சர்ச்சையாகி தொடர்கிறது. இந்த வயதில் லிப் டூ லிப் முத்தம் எல்லாம் தேவையா? என வலைதளங்களில் விளாசுகிறார்கள். இந்நிலையில் முத்தக் காட்சி பற்றி அபிராமி விளக்கம் கொடுத்திருக்கிறார், ‘தற்போது எல்லாம் இது தான் என்று இல்லாமல் எது வேண்டுமானாலும் சர்ச்சை ஆகிறது. மணி சாரின் லாஜிக்கை நான் கேள்வி கேட்க மாட்டேன். அவரின் லாஜிக்கை அப்படியே ஏற்கிறேன். தக்லைஃப் படத்தில் எனக்கு ஸ்டிராங்கான, […]

பாடகி சின்மயி பாடுவதற்கு தடை விதித்த விவகாரம்: நடிகர் ராதாரவி டென்ஷன்..

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், பாடகி சின்மயி ‘முத்த மழை’ என்ற பாடலை பாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. படத்தில் ‘தீ’ பாடியதை விடவும் சிறப்பு என பாராட்டி வருகின்றனர். இந்த இனிய குரலையா பாடவிடாமல் தடை விதித்தீர்கள்? என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வியெழுப்பி வருகின்றனர். முன்னதாக, மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ […]

விஜய்யின் தவெக கட்சி குறித்து, கமல்ஹாசன் பேச்சு..

விஜய்யின் தவெக கட்சி பற்றி கமல் தெரிவித்துள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துக் காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ பட புரமோஷனுக்காக துபாய் செல்லும் கமல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானது பற்றித் தெரிவிக்கையில், ‘அங்கே நமது மையத்தின் குரல் ஒலிக்க வேண்டும். பாரபட்சம் இல்லாத தமிழ்நாட்டு மக்களுக்கான குரலாக அது இருக்கும்’ என்றார். விஜய்யின் தவெக கட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நானும் […]

‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவின் டெடிகேஷன்: சின்னி ஜெயந்த் பாராட்டு..

தனுஷ் நடித்த ‘தொடரி’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் சின்னி ஜெயந்த். இதனைத் தொடர்ந்து, தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக்லைஃப்’ படத்திலும் சின்னி ஜெயந்த் நடித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சின்னி ஜெயந்த், படத்தில் சிம்புவின் நடிப்பை பாராட்டியிருக்கிறார். ‘சிம்புவை நாம் முன்பு எப்படி அழைப்போம். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று தானே அழைப்போம். அவர் இப்பவும் லிட்டில் சூப்பர் ஸ்டார் தான். தக் லைஃப் படத்தில் அவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. கண்டிப்பாக ரிலீசுக்கு பிறகு, […]

மணிரத்னம் இயக்கத்தில், மீண்டும் சிம்பு நடிக்கும் காதல் படம்..

‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து காதல் கதையொன்று உருவாக்கவுள்ளதாக மணிரத்னம் தெரிவித்திருந்தார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகவுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சிம்பு. கமலுடன் இணைந்து இப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளார். முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார் சிம்பு. இதனையடுத்து தற்போது ரிலீசாகவுள்ள […]