Browsing tag

story

‘அஸ்ஸி’ படத்தில், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வழக்காடும் டாப்ஸி..

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘அஸ்ஸி’ படம் வரும் 20-ந்தேத வெளியாக உள்ளது. அனுபவ் சின்ஹா இயக்​கத்தில், கனி ஸ்குரு​தி, ரேவ​தி, மனோஜ் பஹ்​வா, குமுத் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஊழல் நிறைந்த அமைப்பு மற்​றும் ஆணா​திக்​கத்​துக்கு எதி​ராகப் போராடும் வழக்​கறிஞ​ராக டாப்ஸி நடித்​துள்​ளார். பாலியல் வன்​கொடுமை வழக்கை விசாரிக்​கும் நீதி​மன்ற விவ​காரத்​தை மையக்கருவாக கொண்ட படம் இது என கூறப்படுகிறது. இந்த சூழலில் பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டாப்ஸி […]

விஜய் சேதுபதி நடிப்பில் ‘பாக்கெட் நாவல்’ பட அப்டேட்ஸ்..

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இணைந்துள்ள பிரபல கூட்டணியின் பட தகவல்கள் பார்ப்போம்.. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘பாக்கெட் நாவல்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ […]

அஜித் நடிப்பில் 5-வது படம்: இயக்குநர் சிவா அப்டேட்ஸ்..

அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் அஜித். இப்படம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு சிவா, ‘அனைத்தும் சரியாக அமையும்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். அந்தப் படம் எந்த ஜானர் என்பதை மட்டும் இப்போது ரகசியமாக வைத்திருக்கிறோம்’ என பதிலளித்துள்ளார். வீரம், ‘வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களில் […]

சவாலை எதிர்கொள்வது மகிழ்ச்சியை தருகிறது: மாளவிகா மோகனன் பேச்சு..

பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி​யில் ஜனவரி 9-ந்தேதி வெளியானது. இப்படத்தில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்திகுமார் என பலர் நடித்​துள்​ளனர். இப்படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இப்​படம் ஓடிடி-​யில் வெளி​யான பிறகு ஊடகங்​களில் ட்ரோலிங்கை எதிர்​கொண்டு வரு​கிறது. அதில் சண்​டைக் காட்​சிகளில் டூப்​களைப் பயன்​படுத்​தி​ய​தாக விமர்​சனம் எழுந்​தது. படத்​தில் மாளவிகா மோக​னன் போல உடையணிந்த ஸ்டன்ட் நடிகரின் புகைப்​படம் வைரலான​தால், அவரும் டூப்பை பயன்படுத்​தி​ய​தாகக் கூறப்​பட்​டது. இதற்கு பதிலளித்​துள்ள […]

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ; வைரல்..

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து கைதி-2 படப்பிடிப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், லோகேஷ் கனக​ராஜ் நடிக​ராக அறி​முக​மாகும் படம், ‘டிசி’. இதை ‘சாணிக்​கா​யிதம்’, ‘கேப்​டன் மில்​லர்’ படங்​களை இயக்​கிய அருண் மாதேஸ்​வரன் இயக்குகிறார். இந்த மிரட்​டலான ஆக்‌ஷன் படத்தை சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கிறது. அனிருத் இசை அமைக்​கிறார். இப்படத்தில் தேவ​தாஸ் […]

தொடர்ந்து வரும் பட வாய்ப்புகள்: நடிகை கயாது லோகர் உற்சாகம்..

கயாது லோகர் நடிக்கும் மலையாள சினிமா பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. டொவினோ தாமஸ், கயாது லோகர் நடிக்​கும் படம் ‘பள்ளிச்​சட்​டம்​பி’. டிஜோ ஜோஸ் ஆண்​டனி இயக்​கி​யுள்ள இப்​படத்​தின் கதை 1950–60-களில் நடப்​பது போல அமைக்​கப்​பட்​டு உள்​ளது. வேர்ல்ட்​வைட் பிலிம்ஸ் சார்​பில் நவுஃபல் மற்​றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் சார்​பில் சாணக்​கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்​கின்​றனர். மலை​யாளத்​தில் உரு​வாகும் இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்னடம் என 5 மொழிகளில் ஏப்ரல்​.9-ந்தேதி வெளி​யாக உள்​ளது. […]

ஓடிடி.யில் ‘பராசக்தி’ படம் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி திரையரங்குகளில் வெளியான ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்றது. 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு சுமார் 30 கட்கள் சென்சார் தரப்பில் அளிக்கப்பட்டது. சென்சார் சொன்ன மாற்றங்களை செய்து படத்தை வெளியிட்டது படக்குழு. படத்தின் ஓடிடி ரிலீஸிலும் சென்சார் வெர்ஷன் வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய ஜீ 5 நிறுவனம், படத்தின் அன்சென்சார்டு வெர்ஷனை வெளியிட்டு உள்ளது. […]

 ‘வித் லவ்’ படம் எப்படி? இயக்குநர் அனில் ரவிபுடி ரிவ்யூ..

புதுமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த ‘வித் லவ்’ படம் பிப்ரவரி 6-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. அபிஷன் ஜீவிந்தை இயக்குநராக அனைவருக்கும் தெரியும் என்றாலும் ஹீரோவாக இது அவருக்கு முதல் படமாகும். வித் லவ் படம் பார்ப்பவர்கள், பாசிட்டிவாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், பகவந்த் கேசரி படம் புகழ் இயக்குநர் அனில் ரவிபுடி. வித் லவ்வை தெலுங்கில் பார்த்துவிட்டு, எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ‘வித் லவ் படத்தை […]

‘மை லார்ட்’ படத்தின் கதை என்ன?: சசிகுமார் பதில்..

ராஜு​முரு​கன் இயக்கத்தில், சசிகு​மார் கதை​யின் நாயகனாக நடித்​திருக்​கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்​சார், ஜெயப்​பிர​காஷ், குரு சோமசுந்​தரம், ஆஷா சரத், கோபி நயி​னார், வசுமித்ர உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். நீரவ் ஷா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்​துள்​ளார். யுக​பாரதி பாடல்​கள் எழு​தி​யுள்​ளார். பிப்ரவரி 13-ந்தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளார்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. சசிகுமார் பேசும்​போது, ‘இந்த படம் கோர்ட்டை மைய​மாக கொண்ட படம் இல்​லை. படத்​தில் கோர்ட் காட்​சிகள் பத்து […]

விஜய் ஆண்டனி தயாரிப்பில் ‘பூக்கி’ படம்: ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது ‘பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி அக்கா மகனும் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில் இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா […]