Browsing tag

story

சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ படம் இரண்டு பாகங்கள்: வெற்றிமாறன் தகவல்..

சிம்பு நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. ‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பின்பாக ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார் சிம்பு. அவ்வகையில், வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘சிம்புவை வைத்து இயக்கும் படம் 5 எபிசோடுகளாக இருக்கும். தற்போது 1 மணி 15 நிமிடம் படம் உள்ளது. ஒரு எபிசோடு கூட முடியவில்லை. […]

பல கதைகள் வந்தன, தவிர்த்து விட்டேன்: மாளவிகா மோகனன் ஓபன் டாக்..

‘எதுவும் எனக்கு உற்சாகமான கதாபாத்திரங்களாக வரவில்லை’ என தெரிவித்துள்ளார் நடிகை மாளவிகா. இது பற்றிய விவரம் காண்போம்.. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார். அவர் மோகன்லாலுடன் நடித்த ‘ஹிருதயபூர்வம்’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியில் சில படங்களில் நடித்துள்ள அவர், இப்போது இந்தி வாய்ப்புகளைத் தவிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், ‘தமிழ், தெலுங்கு […]

இயக்குநர் மிஷ்கின் கொடுத்த ‘கிஸ்’: சுவாரஸ்ய தகவல்..

கதைக்கேற்ற தலைப்பு வைக்கப்படுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு.. நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும் தேவயானி, கவுசல்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜென் மார்டின் இசை அமைத்துள்ளார். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய இளைய தலைமுறையின் காதலைக் கொண்டாடும் படமாக உருவாகியுள்ளது. படம் பற்றி இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் […]

ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர் யார்?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மீண்டும் சேர்ந்து ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என சினிமா ரசிகர்கள் பல வருடமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நானும், ரஜினியும் சேர்ந்து நடிக்கப் போகிறோம் என்று அண்மையில் நடந்த சைமா விருது விழாவில் உறுதி செய்தார் கமல்ஹாசன். சேர்ந்து நடிக்கிறோம் என்று சொன்னாரே தவிர, அதை இயக்கப் போவது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை சேர்த்து வைத்து படம் எடுக்கும் திட்டத்தில் இருந்தார் லோகேஷ் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் குறித்து, எடிட்டர் விமர்சனம்; வைரல்..

தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ குறித்து படத்தின் எடிட்டர் பிரதீப் இ. ராகவ் கூறிய தகவல்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தற்போது வைரலாகி வருகின்றது. படம் எப்படி என்பது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘ஜன நாயகன்’ பற்றி ஏதாவது சொன்னால், படத்திலிருந்து என்னை நீக்கிவிடுவார்கள், ஆனால, சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அப்படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கொரு நேரம் வரவேண்டும். ஆனால் ‘ஜன நாயகன்’ சூப்பராக வந்துள்ளது. 100 சதவீதம் ‘விஜய்யிஸம்’ படத்தில் உள்ளது. […]

நாம் வந்த வழியை மறக்கக்கூடாது: ‘இட்லி கடை’ படம் குறித்து தனுஷ்..

பன்முகத் திறமையாளரான தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படம் குறித்து தனுஷ் தெரிவிக்கையில், ‘அதென்ன இட்லி கடை? இதைவிட சக்தி வாய்ந்த தலைப்பை வைத்திருக்கலாமே’ என்று சிலர் கேட்கிறார்கள். சில படங்களில் ஹீரோவின் பெயரையே […]

இவ்வளவு பெரிய வரவேற்பை எதிர்பார்க்கவில்லை: துல்கர் சல்மான் உற்சாகம்..

பட்ஜெட்டைவிட, கதை பிடித்திருந்தால் ரசிகர்கள் கொண்டாடுவர். அவ்வகையில் வந்துள்ள படம் லோகோ. டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லோகா: சாப்டர் 1’ படம் வரவேற்பு பெற்றுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனால் உலகமெங்கும் மொத்த வசூலில் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் துல்கர் சல்மான், ‘எங்களுடைய தயாரிப்பில் 7-வது படம் ’லோகா’. ஆனால், இதுபோல […]

‘இட்லி கடை’ படத்தின் கதை எப்படி உருவானது?: தனுஷ் விளக்கம்..

தனது பால்ய வயதில் நிகழ்ந்த வாழ்வியல் குறித்து, தனுஷ் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தனுஷ் பேசியதாவது, ‘நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும். தினமும் அந்த இட்லி கடையில் எப்படியாவது இட்லி சாப்பிட […]

‘கும்கி-2’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் அப்டேட்ஸ்..

பிரபுசாலமன் இயக்கத்தில் ‘கும்கி 2’. படமும் உருவாகியுள்ளது. யானைகளை பின்புலமாக கொண்டே உருவாக்கி இருக்கிறார். இப்படம் குறித்த தகவல்கள் காண்போம்.. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கும்கி’. இப்படத்தின் பாடல்கள், காட்சியமைப்புகள் உள்ளிட்டவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் மூலமாகவே விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமானார். தற்போது இதன் 2-ம் பாகத்தினை உருவாக்கி இருக்கிறார் பிரபு சாலமன். ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் ‘கும்கி 2’ […]

அனுஷ்கா பாணியில் ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த திடீர் முடிவு..

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ‘ஆக்‌ஷன்’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’, ‘தக் லைஃப்’, ‘மாமன்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் ‘இந்த துறையில் செயல்பட சமூக ஊடகங்கள் அவசியம் என நினைத்திருந்தேன். பணிபுரியும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன். […]