Browsing tag

love

எங்களது ரிலேஷன்ஷிப் தொடரும்: ஜி.வி.பிரகாஷ் பற்றி சைந்தவி

‘இல்லறத்தில் பிரிந்தாலும், இசையால் இணைந்திருக்கிறோம்’ என்கிறார் சைந்தவி. இது குறித்த இசைக்காதல் காண்போம்.. ஜி்.வி.பிரகாஷ்-சைந்தவி காதல் தம்பதியர் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில், அவர்களது திருமண வாழ்க்கையில் சில விரிசல்கள் வர ஆரம்பித்தன. அதற்கு காரணம், ஜி்.வி. பிரகாஷ் நடிக்க வந்ததுதான் என பலர் கூறினர். அந்த விரிசல் மேற்கொண்டு பெரிதாகி இருவரும் பிரிந்து விட்டார்கள். இருப்பினும், ஜி.வி. பிரகாஷின் இசை கச்சேரியில் கலந்துகொண்டு சைந்தவியும் பாடினார். […]

விஜய் தேவரகொண்டாவின் ‘ரிஷி’ யார் தெரியுமா?: வைரலாகும் நிக்நேம்

மனசுக்கு பிடிச்சவங்களை நிக்நேம் வைத்து அழைப்பதுண்டு. அது லூசு, எருமை, செல்லம் என எதுவாகவும் இருக்கலாம். அப்படியொரு நிகழ்வு பற்றிப் பார்ப்போம்.. திரைப்பயணத்தின் தொடக்கத்தில் வெற்றிகளை குவித்த விஜய் தேவரகொண்டா சமீப காலமாக தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ‘கீதா கோவிந்தம்’ படத்திற்குப் பிறகு தரமான வெற்றி கிட்டவில்லை. இந்நிலையில், விஜய் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் ‘கிங்டம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் பிரபு, அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘லவ் மேரேஜ்’. இப்படத்தில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, நிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளனர். படம் பற்றி சண்முக […]

நாகசைதன்யா-சமந்தா நடித்த ‘அந்த படம்’ ரொம்ப பிடிக்கும்: சோபிதா ஓபன் டாக்

சைதன்யா நடித்த படங்களில், தனக்கு பிடித்த படம் குறித்து சோபிதா தெரிவித்ததை பார்ப்போம்.. சமந்தா உடனான 7 ஆண்டு காதல், திருமணம், 3 ஆண்டுக்குப் பிறகு விவாகரத்து என தன் வாழ்க்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்க்கை குறித்து நாக சைதன்யா தெரிவிக்கையில், ‘ எங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த வேலை செய்தாலும் சோபிதாவிடம் ஆலோசனை கேட்கிறேன்’ என்றார். இந்நிலையில், நாக […]

‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் விளக்கம்

தனது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் பற்றி சுசீந்திரன் பேசியுள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என வெற்றிப் படங்களை கொடுத்தவர் சுசீந்திரன். இவர் தற்போது இயக்கியுள்ள படம், 2கே லவ் ஸ்டோரி. இப்படத்தில் ஜெகவீரா நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், வினோதினி என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு […]

காதல் கணவர் நடித்த ‘தண்டேல்’ படம் வெளியீடு; சோபிதா இரட்டிப்பு மகிழ்ச்சி

நாக சைதன்யாவின் காதல் மனைவி செம குஷியில் உள்ளார். அது குறித்து அவர் தெரிவித்த சங்கதி பார்ப்போம். நாக சைதன்யா நடிப்பில் ‘தண்டேல்’ வெளியீட்டையொட்டி படக்குழுவினருக்கு சோபிதா கூறியதாவது: ‘மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ‘தண்டேல்’ படப்பிடிப்பு நடந்த நாட்களில் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும், கவனம் செலுத்தியவராகவும் இருந்தீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என தனது கணவரின் படத்தைப் பதிவிட்டுள்ளார். இருப்பினும், சோபிதா மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நல்ல செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். ‘கடைசியாக உங்கள் […]

தனது வருங்கால காதல் கணவரை தமன்னா பிரிந்து விட்டாரா?

தமன்னா-விஜய் வர்மா இருவரும் இன்றும் காதலர்களாய் தொடர்கிறார்களா? என காண்போம்.. நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் நடிகை தமன்னா, இதுவரை திருமணம் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. விஜய் வர்மா பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள் மற்றும், வலைத் தொடர்களில் பிஸியாகி வருகிறார். தமன்னாவை இவர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற அந்தாலஜி படத்தில் நடிக்கும்போது காதலிக்கத் தொடங்கி நெருக்கம் ஆகினர். ஒருமுறை தமன்னாவிடம் ரொமாண்டிக் காட்சிகளில் நடிக்காத நீங்கள், திடீரென்று இதுபோன்ற படங்களில் மிக […]

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது?: கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..

வரலாற்றில் கி.மு, கி.பி. எப்படி முக்கியமாக பார்க்கப்படுகிறதோ, அதுபோல தி.மு, தி.பி. பார்க்கப்படுகிறது. அவ்வகையில், கீர்த்தியின் வாய்மொழி பார்ப்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், தொழில் அதிபர் ஆண்டனி தட்டிலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமதியான பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என பேசியிருக்கிறார். ‘திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறியது போன்று தெரியவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. அது எனக்கு பழகிவிட்டது. ஆனால், ஆண்டனிக்கு […]

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா கருத்து..

தனுஷ் இயக்கிய திரைப்படத்தைப் பார்த்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் ‘நல்லா’ இருக்கா? இல்லையா? என அவரது கருத்தைப் பார்ப்போம்.. தமிழ்த் திரையில் பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். இந்நிலையில், இவர் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா. அப்படம் குறித்து கூறியவற்றை காண்போம்.. பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக இருந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைப் பார்த்துவிட்டு ரெட் ஜெயன்ட் நிறுவனம், மிகவும் […]

இமயமலைக்கு சென்று செட்டிலாகி விடுவேன்: நடிகர் ரவிமோகன் பேச்சு..

‘இரவுக்கு பின்னே பகல், பிரிவுக்கு பின்னே உறவு’ இந்த வாழ்க்கையே ஒரு வட்டம் தான் சார்.! அதாவது ரவிமோகன் சார் விஷயத்திற்கு வருவோம்.. ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு காரணமாகவும் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வாயிலாக தெரிவித்த ரவிமோகன் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து, இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த குடும்ப நல […]