Browsing tag

life

‘கயிலன்’ படத்தில், அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது: இயக்குனர் அப்டேட்ஸ்..

‘கயிலன்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ஷிவதா, ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம், ‘கயிலன்’. இதில் பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கியுள்ளார். ஜூலை 25-ல் வெளியாகும் இதன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் பற்றி இயக்குநர் அருள் அஜித் தெரிவிக்கையில், ‘கயிலன்’ என்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். […]

திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை: நடிகை சதா கொள்கை

ஒவ்வொருவரும் சதா சதா நினைப்பதெல்லாம், சம்பாத்தியம், திருமணம், வாழ்க்கை பற்றியது தானே. இதில், நடிகை சதா பற்றிய கூற்று பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், ‘ஜெயம்’ படத்தின் மூலமாக வசீகரித்தவர் நடிகை சதா. கோலிவுட்டை கடந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் உலா வந்தார். தமிழில் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்துக்கு பிறகு, அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் மஜீத் இயக்கிய ‘டார்ச்லைட்’ படத்தில் விலைமாதுவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது சதா, போட்டோஷுட் எடுத்து வெளியிட்டு ரீ என்ரி […]

தேவயானியின் அப்பாவித்தனம் பிடித்திருந்தது: இயக்குனர் சாய் கணேஷ் சுவாரஸ்ய தகவல்

இயக்குனர் சாய் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 BHK படம் வரும் ஜூலை 4-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தெரிவிக்கையில், ‘இந்த படத்தில் தேவயானி மேடம் நடிக்க வைக்க காரணம். அம்மா கதாபாத்திரத்திற்கு யார் என யோசிக்கும்போது, எனக்கு உடனே தோன்றியது தேவயானி மேடம் மட்டும் தான். அதன் பின்னர் வேறு யாருமே எனக்கு தோன்றவில்லை. காரணம் தேவயானி மேடம் இடம் இருக்கும் […]

சென்னையில் இருக்க பயந்தேன்: நடிகை ரம்யா கிருஷ்ணன் ப்ளாஷ் பேக்

ரம்யாவின் ரம்மிய நினைவலைகள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம் மறக்க முடியாதது. ரஜினி என்ற பெரிய ஆளுமைக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். ரஜினியேகூட அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து வியந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அவரே பல மேடைகளில் கூறியும் இருக்கிறார். படையப்பா படத்தில் நடித்ததிலிருந்து ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது எனலாம். மேலும், ரம்யா கிருஷ்ணனை […]

நடிகர் ஸ்ரீ எழுதிய ‘மே ஐ கம் இன்’ நாவல்: நெட்டிசன்ஸ் வாழ்த்து

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’, மிஷ்கின் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. இவர், முன்பு இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது? என வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஸ்ரீ நடித்த படங்களுக்கு அவருக்கு சம்பளம் […]

இயக்குனர் அட்லீ சொன்ன குட்டிக்கதை: வைரலாகும் நிகழ்வு

கோலிவுட் முதல் பாலிவுட்வரை முத்திரை பதித்த அட்லீ இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படமான அல்லு அர்ஜுன் படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவர் படித்த சத்யபாமா கல்லூரியில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசிய அனுபவப் பேச்சு தற்போது வைரலாகி தெறிக்கிறது. அவர் பேசியதாவது: ‘இந்த கல்லூரியில் சேர்ந்த முதல் ஐந்து நாட்களிலேயே ஷார்ட் பிலிம் எடுக்கிறேன், கேமரா வேண்டும் என்று கேட்டேன். இந்த கல்லூரியின் தாளாளர் எடுத்துக்கோபா, […]

அச்சம் தருகின்ற விமானப் பயணம்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‘திடுக்’ பதிவு

குஜராத் விமான விபத்தைத் தொடர்ந்து, விமானப் பயணம் மற்றும் விபத்து குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பதிவிட்டுள்ளதாவது: FLIGHT FRIGHT! விமான விபத்து கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் செய்திதான். ஏனென்றால், அந்த காலம் போல அல்லாமல் இன்று எல்லோருமே பறக்கிறோம். பறக்கிற எல்லோருமே நம் விமானத்துக்கு ஒன்றும் ஆகாது என்கிற வழக்கமான மனித நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறையும் பறக்கிறோம். இதற்குப் பயந்து விமானப் பயணங்களையே தவிர்க்கிற பலரையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். […]

தனது பெற்றோர் கமல்-சரிகா விவாகரத்து பற்றி ஸ்ருதிஹாசன் வைரலாகும் பேச்சு

தனது முதிர்ந்த வாழ்வியல் அனுபவத்தை ஸருதிஹாசன் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ருதி ஹாசன், தனது பெற்றோரான கமல்ஹாசன்-சரிகா ஆகியோரின் விவாகரத்து குறித்து முன்பு தெரிவித்த தகவல்கள் தற்போது மீண்டும் வலைதளங்களில் விவாதத்திற்கு வந்துள்ளது. தந்தை-தாயின் பிரிவு தனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக் கொடுத்தது, குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது என கூறியுள்ளார். ‘நான் சின்ன வயதில் […]

நடிகர் ரவிமோகனின் புதிய தொடக்கம்

ரவி மோகன் தற்போது ‘கராத்தே பாபு’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடித்துள்ள ‘ஜீனி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘தனி ஒருவன்-2′ படமும் நடிக்கவுள்ளார். தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கும் ரவி மோகன் விவாகரத்து கோரியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்து வரும் போதிலும், புதிய தொடக்கங்களை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில், அவர் […]

தனது வாழ்க்கை அனுபவம் பற்றி ராஷ்மிகா நேர்மறை பேச்சு: வைரலாகும் நிகழ்வு..

நடிகை ராஷ்மிகா மந்தனா, ஐதராபாத்தில் நடைபெற்ற ‘வி வுமன் வாண்ட்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கையில், ‘எனது வாழ்க்கையின் மிக மோசமான கட்டங்களை அல்லது மனதுக்கு வேதனையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது நான் பின்பற்றும் ஒரு எளிய மந்திரம் உள்ளது – ‘இந்த நாளும் கடந்து போகும்’. இந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த வலிமையை அளிக்கின்றன. எந்தக் கஷ்டமும் நிரந்தரமில்லை, காலம் எல்லாவற்றையும் சரிசெய்யும் என்ற நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது. ஒரு பொதுநபராக, குறிப்பாக சினிமா துறையில் […]