Browsing tag

director maniratnam

மீண்டும் ‘அலைபாயுதே’ போல, ஒரு காதல் கதை: மணிரத்னம் இயக்கும் அடுத்த படம்..

அடுத்து, காதல் கதையை படமாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் மணிரத்னம். இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவலை மணிரத்னம் வெளியிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘காதல் கதையம்சம் கொண்ட படத்தை, புதிய முகங்களை வைத்து இயக்க விரும்புகிறேன். அதற்கு இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று நல்ல ஸ்கிரிப்ட், இரண்டு சரியான நடிகர்கள். இவை […]

‘நாயகன்’ பட மணிரத்னமும் நானும், இப்போது இல்லை: கமல்ஹாசன் பேச்சு..

‘நாயகன்’ பட ஞாபகமே வராமல் ‘தக் லைஃப்’ படம் செய்திருக்கிறோம் என்றார் கமல். இது குறித்த தகவல்கள் காண்போம்.. மணிரத்னமும் கமல்ஹாசனும் மீண்டும் இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்’. இப்படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது, ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடித்திருக்கிறேன். அப்போது இருந்ததை விட இருவருமே இப்போது அனுபவம் வாய்ந்தவர்களாக மாறியிருக்கிறோம். ‘நாயகன்’ படத்தில் நடித்த கமல்ஹாசனும் அதை இயக்கிய மணிரத்னமும் இப்போது இல்லை. […]

மணிரத்னத்திற்கு இந்தி தெரியாதா?: கமல்ஹாசன் பெருமிதம்..

மணிரத்னமும் இந்தி மொழியும் குறித்து வைரலாகும் தகவல் காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. படத்தில், சிம்பு, திரிஷா அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மணிரத்னம், கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்பொழுது ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மணிரத்னத்திடம், ‘கமல்ஹாசனை சந்தித்தபோது அவர் எப்படி ரியாக்ட் […]

‘தக் லைஃப்’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் கணிப்புகள்..

மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் கதை பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. சிம்புவின் நடிப்பில் ‘பத்து தல’ என்ற படம் கடைசியாக வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தில், கமல் ‘ரங்கராஜா சக்திவேல்’ என்ற ரோலில் நடிக்கின்றார். சிம்பு அமர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. கதைப்படி, ரங்கராய சக்திவேல் தன் உயிரை காப்பாற்றிய சிறுவனை தத்தெடுத்து வளர்க்கிறார். தன் பிள்ளையாகவே அந்த சிறுவனை வளர்க்கிறார் […]

‘தக் லைஃப்’ டிரெய்லரில் கமல்-அபிராமி முத்தக்காட்சி: பரபரக்கும் விவாதங்கள்..

யுத்தம் என்பதற்கும் முத்தம் என்பதற்கும் ஒரு எழுத்துதான்ங்க வித்தியாசம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி, அதில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சியில் கமல்ஹாசன் தன்னைவிட 30 வயது இளைய நடிகை அபிராமி உடன் நெருக்கமான காட்சியில் நடித்திருப்பது சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அதிரடிக் காட்சிகள், கமல்ஹாசனின் வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் பிற காட்சிகள் கவனத்தை […]

இரண்டு விஷயங்களை நான் செய்யவே மாட்டேன்: சுஹாசினி ‘வைரல்’ வாய்ஸ்..

மணி சார் குறித்து சுஹாசினி தெரிவித்த தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்த ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது டிரெய்லரும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மணிரத்னம் குறித்து சுஹாசினி அரிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘மணிரத்னத்துக்கும் எனக்கும் சரியான புரிதல் இருப்பது இசையில்தான். எங்களை இசைதான் இணைக்கும். ஏதேனும் ஒரு கூட்டத்தில் இருக்கும்போது, எனக்கு பிடித்த பாடல் ஒலிபரப்பப்பட்டால் என்னை தேடி பிடித்து […]

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தின் கதை குறித்து, கமல்ஹாசன்..

‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியானால் கதைக்களம் மேலும் தெரிய வரும். முன்னதாக, கமல்ஹாசன் தெரிவித்த கதை பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்பட பலர் நடித்த ‘தக் லைஃப்’ படம் வரும் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, வரும 17-ந்தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ கதை குறித்து தெரிவிக்கையில், ‘ இந்த படத்தின் கதையை […]

அழகாக இருந்தால் திமிர் இருக்குமா?: சுஹாசினி பற்றி பார்த்திபன் பேச்சு..

50 வயதிலும் வரும் வெட்கம் பேரழகானது. அப்படியொரு நிகழ்வு காண்போம்.. மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்து மேலும் தனி முத்திரை பதித்தது தெரிந்ததே. பார்த்திபன் என்றாலே இயக்கம் மற்றும் நடிப்பு, பேச்சிலும் தனித்துவம் நிறைந்தவர் தான். அதேபோல, வலைத்தள பதிவுகளிலும் ஏதாவதொரு வித்தியாசத்தை வைத்துவிடுவார். அது பாராட்டையும் பெற்றிருக்கிறது. ட்ரோல்களையும் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் வரலட்சுமி, சுஹாசினி உள்ளிட்டோர் நடிப்பில் கிருஷ்ணா ஷங்கர் இயக்கியிருக்கும் ‘தி வெர்டிக்ட்’ என்ற படத்தின் […]

ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படக்குழு: கோலிவுட் வட்டாரம் பெருமிதம்

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. இந்தியாவை தாண்டி தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு தரும் நாடாக அமெரிக்கா, சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இருக்கின்றன. இங்கு தமிழ் மக்கள் அதிகம் வசிப்பதால், தமிழ் படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். வசூல் சாதனையும் படைக்கிறது. இந்நிலையில், கமல்ஹாசன் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ் […]

மணிரத்னம் இயக்கிய படம் ரீரிலீஸ் ஆனால், தியேட்டர்கள் எரியும்: ராஜீவ் மேனன் கருத்து

மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் ஜுன் மாதம் வெளியாகிறது என்பது தெரிந்ததே. இச்சூழலில், அவர் முன்னதாக இயக்கிய ‘பம்பாய்’ படம் ரீரிலீஸானால் வரவேற்பு எப்படி இருக்கும்? இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 1995-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, நாடு முழுவதும் கலவர பூமியாக இருந்தது. வன்முறை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் ‘பம்பாய்’ திரைப்படம் இயக்கியிருந்தார். இந்து பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இப்படத்தின் […]