Browsing tag

Chief Minister Vijay

முதலமைச்சர் விஜய்யுடன் பயணித்தது குறித்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சி பதிவு!

நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இதன் காரணமாக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது […]

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகர் ஜெய்!

தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய்யை நடிகர் ஜெய் இன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அன்பும், பரஸ்பர மரியாதையும், நட்புணர்வும் நிறைந்ததாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யை தனது சகோதரர் எனக் குறிப்பிட்டுள்ள நடிகர் ஜெய், அவருடன் நேரம் செலவிட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய் கூறுகையில், “எனது சகோதரருடன் மிகவும் அன்பான மற்றும் மகிழ்ச்சியான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் சிறிது நேரம் செலவிட்டதற்கு நன்றியுடன் இருக்கிறேன். தமிழக […]

முதலமைச்சர் விஜய்க்கு மறக்க முடியாத பரிசை வழங்கிய விஷால்!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால், வழக்கமான மரியாதை பரிசுகளுக்கு பதிலாக சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விலைமதிப்பற்ற பரிசை வழங்கியுள்ளார். நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் பல ஆண்டுகளாக பொருளாதார வசதி குறைந்த மாணவ, மாணவிகளின் கல்விக்காக தொடர்ந்து உதவி செய்து வருகிறார். மேலும், விழாக்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொன்னாடை, பூங்கொத்து போன்ற பாரம்பரிய பரிசுகளை வழங்குவதை தவிர்த்து, அதற்கு மாற்றாக கல்வி உதவிகளை […]

முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் ‘மெர்சல்’!

தமிழக முதல்வர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மெர்சல்’ திரைப்படம், ஜூன் 19ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2017ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த இந்தப் படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கொண்டாடும் முதல் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கான சிறப்பு கொண்டாட்டமாக ‘மெர்சல்’ ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் வருவதையொட்டி, ஜூன் […]

முதல்வர் விஜய் பெயரில் சிறப்பு விருது அறிவிப்பு!

2025-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற 18-வது எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் பெற்று கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் மலேசிய துணை அமைச்சர் ராமராஜ், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் […]

முதலமைச்சர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை!

எழுத்தாளர் மற்றும் இயக்குநராக தனித்துவமான படைப்புகளை வழங்கி வரும் சீனு ராமசாமி, தனது புதிய நூலான ‘சினிமாவின் ஆன்மா (சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்)’ குறித்து பேசியதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற போதிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஆழமாக இணைந்துள்ள சினிமாவை சரியாகப் புரிந்துகொள்ளும் கல்வி இல்லாதது குறையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய குழந்தைகள் […]

“என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்” – முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை

நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (47), மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கிருமி தொற்றும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 17 நாட்களாக நினைவின்றியும், சுவாசிக்க சிரமப்பட்டும் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவிக்கு மேல் சிகிச்சை அளிக்க உதவி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் நடிகர் முத்துக்காளை உருக்கமான கோரிக்கை […]