Browsing tag

awards

என்னுடையது அல்ல, நம்முடையது: அனிருத் பெருமிதம்..

தமிழ் சினிமாவில் தனித்த இசையமைப்பினால் அனிருத் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது கூலி படத்தை தொடர்ந்து, ஜெயிலர்-2, ஜனநாயகன் படங்களில் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டுக்கான இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் அனிருத். இந்த விருது வென்றது குறித்து அனிருத் அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் […]

திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு; முழு விவரம்..

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது. கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, திரைத் துறையைப் பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் […]

தேசிய விருது வழங்குதல் குறித்து, நடிகர் பிரித்விராஜ் கருத்து..

பிருத்விராஜ் நடித்து 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடுஜீவிதம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதில் சிறப்பாக நடித்ததற்காக, பிருத்வி ராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிடைக்காததால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், விருது கிடைக்காதது பற்றி பிருத்விராஜ் தெரிவிக்கையில், ‘ஒரு 10 பேர் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்து மதிப்பீடு செய்யவோ, அல்லது ஒரு ஜூரி படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ திரைப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை. மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. டிக்கெட் வாங்கி, திரையரங்கங்களுக்கு வந்து அந்த அனுபவத்தை […]

சர்வதேச பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற தமிழ்ப்படம்..

கமர்ஷியல் கதைகள் ஒருபுறம் வருந்தாலும், விருதுகளுக்கான கதைகளும் வந்து அங்கீகாரம் பெறுகின்றன. அவ்வகையில், முன்னதாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’ படம் சர்வதேச பட விழாக்களில் பல விருதுகளை குவித்தது தெரிந்ததே இந்நிலையில் பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கிய படம், ‘பிஎம்டபிள்யூ 1991’. இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கிரீன் விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரித்துள்ள இந்தப் […]

விருதுகள், அரசியலாக மாறக்கூடாது: நடிகை ஊர்வசி அதிருப்தி..

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்), சிறந்த இசைக்​கான விருது ஜி.​வி.பிர​காஷ் குமார் (வாத்தி), சிறந்த கதை வசனத்துக்கான விருது ராம் குமார் பால​கிருஷ்ணன் (பார்க்கிங்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ்ப் படமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மலையாளத்தில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ படத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு விருது எதுவும் […]

கடுமையான இயக்குனரா பாலா?: ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கருத்து

சிறந்த இயக்குனர் தான் பாலா. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக கடுமையாக நடந்துகொள்வாரா? என்பது பற்றி ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கருத்து காண்போம்.. தமிழ்த்திரை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் பாலா. சேது படத்தில் இயக்குனராக அறிமுகமாகி நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என தனித்த முத்திரை பதித்தவர். இவற்றில் பிதாமகன் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக பாலா தேசிய விருது பெற்றார். பரதேசி திரைப்படமும் பெரும் கவனத்தை ஈர்த்தது. […]

ஆஸ்கர் விருதுக்காக 4-வது குழந்தையும் பெற்றுக்கொள்ள தயார்: நடிகர் சூரஜ் சுவாரஸ்ய தகவல்..

பிரபல மலையாள நடிகர் சூரஜ், தான் ஆஸ்கர் விருதைப் பெறும் முயற்சியை கூறியுள்ளார். அவரது கலகல பேச்சு காண்போம்.. ‘சித்தா’ படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ள ‘வீர தீர சூரன்’ படத்தில் விக்ரம், காளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன், ‘கலைவாணி’ கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் இப்படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகிறது. […]

தவறான விமர்சகர்களுக்கு, கங்கனா ரனாவத் அதிரடி பேச்சு

‘ஆஸ்கர் தேவையில்லை, தேசிய விருது இருக்கிறது’ என கூறியுள்ளார் நடிகை கங்கனா. இது குறித்த விவரம் காண்போம்.. கங்கனா ரனாவத் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகு வந்த விமர்சனங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். ‘எமர்ஜென்சி’ படத்தை கங்கனா ரனாவத் இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். கடந்த ஜனவரியில் ரிலீஸானது. தியேட்டரில் தோல்வியை தழுவிய இப்படம் அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அப்போது படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ‘இப்படத்தை இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு […]

அஜித்துக்கு பத்மபூஷன் விருது: விஜய்யை தவிர, அரசியல்-திரை பிரபலங்கள் வாழ்த்து

பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள அஜித்துக்கு, வாழ்த்து தெரிவித்துள்ள பிரபலங்களின் வாசகங்கள் வாசிப்போம் வாங்க.. நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விருதை பெறும் 5-வது தமிழ் நடிகர் அஜித் ஆவார். இதற்கு முன்னதாக சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோருக்கு மட்டுமே பத்ம பூஷன் விருது கிடைத்திருக்கிறது. இந்நிலையில், அஜித்துக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக சார்பில் […]

12 விருதுகளை வென்ற ‘சாட்சி பெருமாள்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது; கதை என்ன தெரியுமா?

வாழ்வியலில் நிகழும் எதார்த்தங்களின் தொகுப்பாக, உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட படம் சாட்சி பெருமாள். இப்படம், ஒடிடி.யில் ரிலீஸாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘சாட்சி பெருமாள்’ என்கிற படத்திற்கு மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். மஸ்தான் இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள ஆர்.பி.வினு கூறும்போது, ‘பத்திரப் பதிவு அலுவலகங்களில் எப்போதும் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவரின் கதைதான் இது. […]