Browsing tag

actor vijay

விஜய் பேசிய ‘அங்கிள்’ என்ற வார்த்தை குறித்து, கே.எஸ்.ரவிக்குமார் கருத்து..

மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசினார். இதற்கு பலவாறு விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவிக்கையில், ‘விஜய் பேசியது எனக்கு தவறாகப்படவில்லை. ஏனெனில், அவர் நேரில் பார்க்கும்போது கூட ‘குட்மார்னிங் அங்கிள், வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள்?’ என்று தான் சொல்வார். அதை இன்று பொதுவெளியில் சொல்லியிருக்கிறார். அதற்கு வேறு ஒரு அர்த்தம் கற்பித்து, ஒரு தரப்பு வேறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறது. நானே ரெட் […]

விஜய்யின் முழுநேர அரசியல் பிரவேசம் குறித்து, சூரி கருத்து..

நடிகர் சூரி கதையெழுதி நடித்த ‘மாமன்’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ‘மண்டாடி’ படப்பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தெரிவிக்கையில், ‘மாமன்’ படத்துக்குப் பின் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முழுக்க மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படம். கண்டிப்பாக புதிதாக இருக்கும். தொண்டி அருகே நடக்கும் படகு ரேஸை பின்னணியாகக் கொண்டிருக்கும். […]

விஜய் சாரை மிஸ் பண்றோம்: அனிருத் ஃபீல்..

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அரசியல் பேசும் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இசையமைத்துள்ள அனிருத், ‘இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் அறிவித்துள்ளதால் அவரை படங்களில் இருந்து மிஸ் பண்ண உள்ளதாக அனிருத் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், லியோ’ படத்தின் ட்ராக்குகளை தனித்தனியாக வெளியிட்டு விட்டோம். அதனால் தான் மொத்தமாக OST ஆக வெளியிடவில்லை. அனைத்தையும் சேர்த்து விரைவில் வெளியிட்டு விடலாம். ’ஜனநாயகன்’ […]

அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: தவெக தலைவர் விஜய் கடிதம்..

நடிகரும் தவெக தலைவருமான விஜய் தற்போது, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பேசும் திரைப்படமாகும். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படம் வெளியாகிறது. கடைசிப்படமாக இந்த படத்தை முடித்துவிட்டு, விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், தவெக தொண்டர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நம் தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் […]

விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் 2-ம் பாகம்: ஏ.ஆர்.முருகதாஸ் அப்டேட்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதர மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது, அதன் 2-ம் பாகம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘தனது படங்களில் எதனை 2-ம் பாகம் செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி’ பண்ணலாம். ஏனென்றால் கதையாகவே […]

‘ஜனநாயகன்’ பட நிகழ்வுகள் பற்றி, பாபி தியோல் பகிர்வு, வைரல்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும், அரசியல் எழுச்சியாய் முழக்கமிடும் படம் ‘ஜனநாயகன்’. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. விஜய்யின் கடைசிப்படமாகவும் இருப்பதால், விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் ஜனநாயகனை கொண்டாடுவார்கள். தற்போது ‘ஜனநாயகன்’ படம் குறித்து இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி தியோல், விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். ‘விஜய் மிகப்பெரிய நட்சத்திரம். அவர் படத்தில் நடிக்கிறேன் என சொன்னவுடன் பலரும் அப்படத்தின் படப்பிடிப்பு எங்கு நடக்கின்றது என்று தான் […]

விஜய் தனது முடிவை மறுபரிசீலனை செய்வாரா?: இயக்குநர் லோகேஷ் ஆர்வம்..

மாஸ்டர்-2, லியோ-2 படங்கள் உருவாகும் வாய்ப்புண்டா? என காண்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக ‘லியோ’ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ படங்களில் இடம்பெறுகிறது. தற்போது ‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் ‘மாஸ்டர் 2’ படத்தின் ஐடியாவை விஜய் சாரிடம் கூறினேன். அப்படம் ரொம்பவே ஜாலியாக இருக்கும். ஏனென்றால், ஜே.டி கதாபாத்திரம் […]

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, தனுஷுடன் ஹெச்.வினோத் கூட்டணி..

தளபதி விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தில் பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இதனை, சாம் சி.எஸ் உறுதி செய்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு […]

‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ படம் மோதலா?: சுதா கொங்கரா விளக்கம்..

விஜய்யின் கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பேசும் கதைக்களத்தில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது. அதனால், விஜய்யின் தவெக கட்சிக்கு பயன்படும் வகையிலும், பொங்கலையொட்டி ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோதலாக ரிலீஸாகிறதா? என்பது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா […]

ஓடிடி.யில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்கள்..

ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்களின் பட்டியல் பார்ப்போம்.. * விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 10-வது இடத்தில் உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் நெட்பிளிக்ஸில் 78 லட்சம் வியூஸ் அள்ளி இருக்கிறது. * பிரதீப் ரங்கநாதன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான டிராகன் 9-ம் இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆன இப்படம் 87 லட்சம் பார்வைகளுடன் 9-ம் இடத்தை […]